`நண்பா… இனி உங்கள் பெயர் துளசிபாய்!' – WHO தலைவர் டெட்ராஸுக்கு இந்தியப் பெயர் வைத்த மோடி

குஜராத்தில், சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மோடி, “டெட்ராஸ் காலையில் என்னைச் சந்தித்தபோது நான் ‘பக்கா’ குஜராத்தியாக மாறிவிட்டதாகவும், நரேந்திர மோடி 250 மில்லியன் டாலர் மதிப்பில் உலக பாரம்பர்ய மருத்துவ மையம்; அடிக்கல் நாட்டிய மோடி; என்ன சிறப்பு? தனக்கொரு குஜராத்தி பெயரை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். … Read more

How to: தனியார் பள்ளி இலவச சேர்க்கை, விண்ணப்பிப்பது எப்படி? How to apply for RTE admission online?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் (RTE – Right To Education), வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கு என LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் நேற்று முதல் (ஏப்ரல் 20) தொடங்கி மே 18 வரை பெறப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இணையதளம் மூலமாகவும், மாவட்ட … Read more

KGF: ஓய்ந்திடாத விசிலும், கைதட்டலும்! ஒரு நாயக பிம்ப சினிமா இப்படிக் கொண்டாடப்படுவதன் உளவியல் என்ன?

Spoiler Alert. படத்தின் சில காட்சிகள் விவரிக்கப்பட்டிருப்பதால், `KGF’ படங்களைப் பார்க்காதவர்கள் உஷார். KGF Chapter 1: வெள்ளைக் கோட்டைக் கடந்த தாயையும் மகனையும் சுட்டுக்கொன்றபின், மற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்க உணவுப் பொருள்களைக் கொடுக்காமல் விடுகிறார்கள் வானரத்தின் ஆட்கள். மனம் நொந்த அந்த மக்களுள் ஒருவர், ‘கதை சொல்லி’ கந்தனை அழைக்கச் சொல்கிறார். “கந்தனைக் கூப்பிடுங்கடா கதை சொல்லட்டும். பசங்க பசியில அழுகறதையாவது நிறுத்துவாங்க.” கதை சொல்லி கந்தனைப் பற்றி ஆனந்த் இளவழகன் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: … Read more

ரயில் விபத்து! – குறுங்கதை

அதிகாலை 3 மணி ரயில் சென்று கொண்டிருக்கிறது. பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் பாலத்தை கடக்க ஆரம்பிக்கிறது. பாதி பாலம் தாண்டிய நிலையில் பெரும் சத்தத்துடன் ரயில் தடம்புரண்டது. பாதி பெட்டிகள் ஆற்றுக்குள் மூழ்கியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள், நடப்பது என்னவென்றே தெரியாமல் ஆற்றுக்குள் மூழ்கினர். தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை விடிய விடிய மீட்டுக் கொண்டு இருந்தனர். அனைத்து பணிகளையும் முடிவுற்ற நிலையில் … Read more

கருத்தடைக்கு பெண்கள் பயன்படுத்தும் 'அந்தாரா' ஊசி – மும்பையில் ஓர் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிப்பு!

பெண்கள் கருத்தடைக்கு பலவிதமான வழிகளைப் பின்பற்றினாலும், தற்காலிக கர்ப்ப தடைக்கு காப்பர் டி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. மேலும், ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் கர்ப்பத்தடை மருந்தும் கிடைக்கிறது. மும்பையில் பெண்கள் எந்த மாதிரியான கருத்தடை சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து புள்ளி விவரங்களை, மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்கள் குறித்து வெளியிடப்பட்ட அந்தத் தரவில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், பெண்கள் தற்காலிக கருத்தடைக்கு ஊசி … Read more

சுதா கொங்கரா – சூர்யா படத்தைத் தயாரிக்கிறதா `கே.ஜி.எஃப்' படத்தயாரிப்பு நிறுவனம்? ட்விஸ்ட் என்ன?

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சூர்யாவுக்கும் அது நல்ல கம்பேக்காக இருந்தது. இந்தப் படத்தை முடித்தவுடன், அதன் இந்தி ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார், சுதா கொங்கரா. அதனை அபன்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை முடித்துவிட்டு, மீண்டும் சூர்யாவை இயக்கவிருப்பதாகவும் அந்தப் படம் ஓர் உண்மை சம்பவத்தை தழுவி இருக்கப்போவதாகவும் இயக்குநர் சுதா கொங்கரா, விகடனுக்கு அளித்தப் பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். “மீண்டும் சூர்யா படத்தை … Read more

“இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்!” – சாமியார்களின் கருத்தும் எழுந்த விவாதமும்!

`இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயக நாடாக இருக்கும். இல்லையெனில் இஸ்லாமிய நாடாக மாறிவிடும். எனவே, இந்துக்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளையாவது பெற்றுக்கொண்டு அவற்றில் 2 குழந்தைகளை இந்துத்துவ அமைப்புகளில் சேர்த்து நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்’ என தொடர்ச்சியாக இந்துத்துவ சாமியார்கள் வலியுறுத்தி வருகின்றனர். சாமியார்கள் உத்தரப்‌பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்‌ தஸ்னா தேவி கோவிலின்‌ தலைமைப்‌ பூசாரியாக இருப்பவர் யதி நரசிங்கானந்த். சர்ச்சைப் பேச்சுகளுக்கு பெயர்பெற்ற இவர், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி டெல்லி … Read more

3 பல்புகள் மட்டுமே உள்ள வீட்டுக்கு ரூ.25,000 மின் கட்டணம்; ஷாக் கொடுத்த மின்வாரியம்! – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள எருமாடு ஆழிஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. 78 வயதான இவரின் செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. கடந்த 2 மாதம் மின்சாரம் பயன்படுத்தியதற்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “மூன்று மின் விளக்குகள் மட்டுமே இருக்கும் வீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமா?” என அதிர்ச்சி அடைந்த தேவகி, பலரிடமும் இது குறித்து முறையிட்டிருக்கிறார். இது குறித்து … Read more

பறவைகளுக்கு தண்ணீர் வைத்தால் மட்டும் போதுமா? – வெயிலும் மனிதமும்!

“இது ஏப்ரல் தான்… இப்பவே இந்த வெயிலுனா… அடுத்த மாசம்… ” என்று விழிப்பிதுங்காத ஆட்களே இருக்க முடியாது. அப்படி பாரபட்சம் பாராமல் நாளுக்கு நாள் பொளந்துக் கட்டிக் கொண்டிருக்கிறது இந்த வெயில். நாட்டில் கோடைக்காலம் மார்ச் மாதம் துவங்கி ஜுன் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும். தென் மேற்கு பருவ மழை துவங்கிய பின் கோடைக்காலம் முடிவடைவது வழக்கம். இந்நிலையில் இம்மாதம் முதல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், ஜம்மு – காஷ்மீர், லடாக் … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் இத்தனை குளறுபடிகளா?! – தொடர் குற்றச்சாட்டுகளும் அமைச்சரின் பதிலும்!

“இறந்தவர், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்தால் மட்டும் போதுமா? கள்ளழகர் திருவிழாவில் நடந்த மோசமான சம்பவத்துக்கும், இன்னும் பல குற்றச்சாட்டுகளுக்கும் யார் காரணம் என்பதை கமிஷன் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை மதுரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கள்ளழகர் மதுரையில் சமீபத்தில் நடந்து முடிந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் இருவர் மரணமடைந்தும், 12 பேர் காயமடைந்த சம்பவமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு … Read more