“ரஷ்யா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவுக்கு அறிவுரை கூற விரும்பவில்லை" – ஜெர்மனி தூதர்

உக்ரைனில் ரஷ்யப் படையினர் நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.` இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யாவுக்கும் சிக்கல் உண்டானது. இதையடுத்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய ரஷ்யா முடிவெடுத்தது. பின்னர் அமெரிக்கா, ரஷ்யாவின் எரிபொருள்களை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. மேலும் தனது நட்புறவு நாடுகளையும் இந்த தடையைப் பின்பற்ற அமெரிக்கா வலியுறுத்தியது. இருப்பினும் … Read more

`டேட்டிங் ஆப்… வீடியோ' – ஓரினச்சேர்க்கையாளர்களை மிரட்டிப் பணம் பறித்த கோவை கல்லூரி மாணவர்கள் கைது!

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த் (22). இருவரும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மாணிக்கம் என்ற ஓர் நண்பரும் இருக்கிறார். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஓரினச்சேர்க்கைக்கு பிரபலமான ஓர் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஓரினச்சேர்க்கை இந்த ஆப்பின் மூலம் கணபதி பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (34) என்பவருடன் பிரசாந்த் பழகியுள்ளார். கங்காதரன் டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, … Read more

முன்னாள் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இசையமைப்பாளர் இமான் – என்ன நடந்தது?

பிரபல இசையமைப்பாளர் டி.இமானுக்கும், மோனிகா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் சூழலில், இமான் தன் குழந்தைகளைச் சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. டி.இமான் – மோனிகா அந்த இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளும் இமானிடம்தான் இருந்துள்ளன. தன் முன்னாள் மனைவி மோனிகா, குழந்தைகளைத் தான் சந்திக்கக் கூடாது என்பதற்காக … Read more

“3 புதிய சிமெண்ட் சாலைகளைக் காணவில்லை..!" – ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பஞ்சாயத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, தோப்பு தெரு, நடுத்தெரு, தொடர்ந்தனூர் ஒட்டு தெரு என 4 தெருக்களுக்கு புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ.17,00,000 மதிப்பீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் 2021 – 2022 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தத்தை, கோலியனூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் தெய்வசிகாமணி பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு சாலை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், 3 … Read more

பணிநீக்கத்தை எதிர்த்து செவிலியர்கள் போராட்டம் – விரைவில் அரசுப் பணி வழங்கப்படும் என அமைச்சர் உறுதி!

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ தேர்வாணையம் மூலமாக 3,200 செவிலியர்கள் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்டனர். கொரோனா தொற்று குறைந்த சமயத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், தாங்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகப் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு செவிலியர்களுடன் மருத்துவத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். செவிலியர்கள் போராட்டம் சமீபத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2,400 செவிலியர்கள் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாகவும், மீதமுள்ள 800 செவிலியர்கள் பின்வரும் காலங்களில் காலிப்பணியிடங்களுக்குத் தகுந்தாற்போல் பணியமர்த்தப்படுவார்கள் என்று மருத்துவத்துறை … Read more

`குறைகளை கேட்டு நிவர்த்திக்கணும்!'-17 வார்டு கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கிய பேரூராட்சி தலைவி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ளது ஆறுமுகநேரி பேரூராட்சி. இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இங்கு 11 பெண் கவுன்சிலர்களும், 7 ஆண் கவுன்சிலர்களும் வெற்றி பெற்றனர். இப்பேரூராட்சியின் தலைவியாக கலாவதி கல்யாண சுந்தரமும், துணைத் தலைவராக அவரின் கணவர் கல்யாண சுந்தரமும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், 17 வார்டு கவுன்சிலர்களுக்கும் தனது சொந்தச் செலவில் ஸ்கூட்டர் (டி.வி.எஸ்- ஜூபிடர்) வாங்கிக் கொடுத்துள்ளார் கலாவதி. பைக் சாவி … Read more

ஹைதராபாத்: விடிய விடியப் போதை பார்ட்டி – சிக்கிய சிரஞ்சீவியின் தம்பி மகள்… என்ன நடந்தது?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பிரபல நட்சத்திர விடுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைப் தாண்டியும் மது விருந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அங்குச் சோதனை மேற்கொண்டபோது, 148 பேர் அந்த மது விருந்தில் கலந்துகொண்டது தெரியவந்தது. மேலும், அங்கு கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். All is well #Niharika…Father @NagaBabuOffl & Your Father In … Read more

தண்டவாளத்தில் விரிசல்; சிவப்பு நிறப் புடவையைக் காட்டி எச்சரித்த மூதாட்டி – தவிர்க்கப்பட்ட விபத்து

உத்தரப்பிரதேச மாவட்டம், எட்டா மாவட்டத்தின் அவகர் தொகுதியில் உள்ள குலேரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. இந்த மூதாட்டி, வயல்களுக்கு வேலைக்கு சென்றபோது, ​​ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசலைக் கண்டார். இதையடுத்து ரயில் ஓட்டுநரை எச்சரிக்க நினைத்த அந்த மூதாட்டி , தான் உடுத்தியிருந்த சிவப்பு நிறப் புடவையை அவிழ்த்து, தண்டவாளத்தில் இரண்டு குச்சிகளை நட்டு, அதில் அந்த புடவையை கட்டி ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை தூரத்திலிருந்து பார்த்த ரயில் ஓட்டுநர், சற்று நேரம் … Read more

5 வயதில் நடிகர்; 8 வயதில் போதை பழக்கம்; Iron Man ராபர்ட் டௌனி ஜூனியர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ராபர்ட் டௌனி ஜூனியர் அயர்ன் மேன் கேரக்டர் ‘அவென்ஜர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு முடிவடைந்தது என அறிவித்த போது கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் சிந்தக் காரணம் ராபர்ட் டௌனி ஜூனியர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு. 57-வது பிறந்தநாளில் அவரை பற்றி சுவாரஸ்யமான 10 தகவல்கள் இதோ… ராபர்ட் டௌனி ஜூனியர் ராபர்ட் டௌனி ஜூனியரின் அப்பாவும் அம்மாவும் திரைத்துறையில் இருந்தவர்கள். அப்பா ஹீரோ, இயக்குநர். அம்மா நடிகை. ராபர்ட் டௌனி ஜூனியர் ஹாலிவுட்டிலேயே பிறந்தவர், முதன்முதலாக … Read more

“8 ஆண்டுகளில் 26,51,919 கோடி ரூபாய் எரிபொருள் வரி வசூலிப்பு, ஆனால்…!" – ப.சிதம்பரம் தாக்கு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்புவரை ஏறத்தாழ 100 நாள்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது கூட, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தொடர்ந்து 13 நாள்களில் 11 முறை பெட்ரோல் – டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று … Read more