“குடிக்கத் தண்ணீர் இல்லை; வெறும் தரையில் படுத்திருந்தேன்!" – ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டுப் போட்டதாகச் சொல்லப்படும் திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணமாக்கியது, அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது என அடுத்தடுத்து மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இதில், திமுக பிரமுகரைத் தாக்கியது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வழக்குகளில் மட்டும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயக்குமார், நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமீன் … Read more

"அவர் தன்னை மாற்றிக் கொண்டால் கோவைக்கு நல்லது" -எம்.பி பி.ஆர் நடராஜன் விமர்சனத்துக்கு வானதி பதில்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார். அந்த மனுவில், கோவையை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து, சேலத்தில் இணைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு “அறியாமையா.. அக்கறையின்மையா?” – வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி கோவை ஏற்கெனவே சேலம் கோட்டத்தில்தான் உள்ளது. இதுதொடர்பாக … Read more

`வொர்க்கிங் மாம்னாலே இப்படித்தான்!' – மனஉளைச்சல் தரும் குழந்தையின் பள்ளி; கையாள்வது எப்படி? – 57

நான் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். என் கணவருக்கு மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை. எங்கள் மகன் ஒன்றாம் வகுப்புப் படிக்கிறான். கொரோனா பொதுமுடக்க சூழலில் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடந்த நிலையில், இப்போது பள்ளி திறந்து நேரடி வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறான். இந்நிலையில், பள்ளியில் அவன் ஆசிரியர்கள், நான் வேலைக்குச் செல்வதால் குழந்தையை சரியாக கவனித்துக்கொள்வதில்லை என்று புகார் சொல்ல ஆரம்பித்திருப்பது எனக்கு மனஉளைச்சல் தர ஆரம்பித்திருக்கிறது. எனக்கு இப்போது 28 வயதாகிறது. என் பிரசவத்துக்கு முன்வரை … Read more

மாறன் விமர்சனம்: டைம் டிராவல் செய்யவைக்கும் பழங்கால சினிமா… ஒரேயொரு கேள்விதான் தனுஷ், ஏன் இப்படி?

நேர்மையான ஊடகவியலாளரான மாறன், அவருக்கு எதிராக நடக்கும் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மாறன்’ படத்தின் ஒன்லைன். மாறன் விமர்சனம் மாறனின் தந்தை ஒரு நேர்மையான ஊடகவியலாளராக இருக்க, வழக்கம்போல் அவரை எதிரிகள் கொன்றுவிடுகிறார்கள். அதே திருநாளில்தான் சிறுவனாக இருக்கும் மாறனுக்கு தங்கை பிறக்கிறாள். அப்பாவின் மரணம் என்ற கலவரத்தின் இடையே தாய்க்குப் பிரசவ வலி வர, ‘வீல்’ என்னும் சத்தத்துடன் குழந்தை பிறக்கிறது. ஒட்டுமொத்த குடும்ப பாரமும் மாறன் … Read more

இலங்கையில் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை! – எவ்வளவு தெரியுமா?

ஒட்டுமொத்த இலங்கையுமே கடந்த 1 மாதமாக மின், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டுக்குமே நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியுடன் எரிபொருள் விலை உயர்வு செய்தியும் உடன் வருகின்றது. மக்களை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகின்றது. இலங்கை இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மற்றும் உள்ளூர் துணை நிறுவனமான லங்கா ஐஓசி எரிபொருள் விலையை உயர்த்தியதை … Read more

முகநூல் நட்பு; மாயமான பள்ளி மாணவி… 24 மணிநேரத்தில் மீட்பு! – செல்போன் சிக்னலால் சிக்கிய இளைஞர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் அவரை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், வெகுநேர தேடுதலுக்கு பின்னும் மாணவி கிடைக்காததால் தனது மகள் மாயமானது குறித்து அவரின் பெற்றோர் கீழராஜகுலராமன் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸ் அதன்பேரில், வழக்கு … Read more

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா… `பாகுபலி' பிரபாஸா இது?

காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில், ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ஒன்லைன். 1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று, அவரின் கை ரேகையை பார்த்து ‘நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்போகிறீர்கள்’ என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற ஆதித்யா. … Read more

மதுரை சிறுமி மர்ம மரணம்; காதலன் குடும்பம் கைது! – தொக்கி நிற்கும் கேள்விகள்… நடந்தது என்ன?

”குற்றவாளிகள் கைது செஞ்சுட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா, விவரம் தெரியாத புள்ளைய கூட்டிட்டு போய் என்ன பண்ணானுங்கிற கேள்விக்கு பதில் இல்லை. அவ குடும்பத்தோட ஏழ்மையை பயன்படுத்தி அரசாங்கமும், போலிஸும் கேஸை முடிசுட்டாங்க” என்று ஆதங்கப்படுகிறார்கள் மேலூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள். சிறுமி மரணம் மதுரை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா கடத்தி சென்றதாக மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மார்ச் 2-ம் … Read more

ஆசிரியர் பணியில் ஆரம்பம்; ஆளுயர சிலையால் அரசியல் அஸ்தமனம்! – ஏன் மாயமானமார் மாயாவதி!

“எனக்குப் பின்னும் எனது லட்சியம் தொடரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான என் லட்சியப் பணிகளை எனக்குப் பின்னால் தொடரும் பணியை மாயாவதியிடம் ஒப்படைக்கிறேன்” – 2001-ம் ஆண்டு அரசியலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்தபோது கன்ஷி ராம் சொன்ன வார்த்தைகள். அதே கன்ஷி ராம் இன்றிருந்தால் “என்னோடு என் லட்சியமும் புதைந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று சொல்லியிருப்பார். மாயாவதியின் மௌன அரசியலே அதற்குக் காரணமாக இப்போது இருந்திருக்கும். கணிக்க முடியாத அரசியல்வாதி என்று … Read more