இந்தியா முழுவதும் நாளை நடக்கவிருக்கும் லோக் அதாலத் – அதன் பயன்கள் என்ன?!

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இந்தியா முழுவதும் நாளை (மார்ச் 12-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. லோக் அதாலத் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் பல முக்கியத் தகவல்களை நாகப்பட்டினம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான செ.சுரேஷ்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாக தீர்வுகாணவும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் உதவுகிறது. இதில், சட்டப் பணிகள் ஆணைக் குழு … Read more

“ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் உலகளாவிய உணவுப் பொருள்களின் விலை உயரும்!" – புதின் எச்சரிக்கை

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால் ரஷ்யா பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் எந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டதோ அந்த நாட்டுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இயலாது. அந்த வகையில், அண்மையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடைவிதித்தது. உணவுப் பொருள் இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதெடர்பாகப் பேசிய … Read more

`நீ நடிகையாகப் போகிறாய்…' கங்கனா ரனாவத் தன்னைப் பற்றி பிரபாஸிடம் சொன்ன ஜோதிடரின் கணிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டையொட்டி நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ் ஏக் நிரஞ்சன் ( Ek Niranjan) படப்பிடிப்பில் கங்கனா ரணாவத் தன்னிடம் சொன்ன சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். பிரபாஸ் சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த நடிகை கங்கனா ரணாவத் சிறுவயதில் … Read more

ட்ரோன் மூலம் தாக்கப்பட்ட சவுதி கச்சா எண்ணெய் நிலையம்! – பாதிப்புகள் குறித்து அறிக்கை

2019-ம் ஆண்டு ஏமன் நாட்டின் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு அரபு அமீரகங்களில் இருந்த எண்ணெய் நிலையங்கள் தான் இலக்காக இருந்தன. அப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அப்காய்க் எண்ணெய் ஆலையில் ஒரு பெரும் தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலுக்கு ஹவூதிகள் பொறுப்பேற்றனர். மேலும் இந்தக் தாக்குதலால் தினசரி உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. … Read more

“காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது"- அமரீந்தர் சிங் காட்டம்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் தோல்வியையே சந்தித்துள்ளது. அதிலும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வென்றது. ஆனால், பா.ஜ.க-வோ உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாப்பில் 92 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக அங்கு ஆட்சியமைக்கவுள்ளது. அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களை மட்டுமே பெற்றது. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இதையடுத்து, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ரன்தீப் … Read more

`யாரிந்த சாந்தனு ஹஸரிகா?' தன் காதலன் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன ஆச்சர்யத் தகவல்!

ஸ்ருதிஹாசன் தற்போது பல முன்னணி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அதற்கு நடுவில் அவருக்கு பர்சனலாக பிடித்த இசை, புத்தகங்கள் இவற்றுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் தவறுவதில்லை. தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருக்கும் ஸ்ருதி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். ஸ்ருதியின் இன்ஸ்டா ஸ்டோரி இப்போது வைரலாகி வரக் காரணம், அவரது நண்பரும் காதலருமான சாந்தனு ஹஸரிகா உடனான புகைப்படமே. இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தவாறு எடுக்கப்பட்டிருக்கும் செல்பியை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் ரியாக்ட் … Read more

`சிறந்த விவசாயிகளுக்கு பரிசுத் தொகை!' – தமிழக அரசு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயத்தில் புதிய உள்ளூர் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், புதிய எந்திரங்களைக் கண்டுபிடித்தல், இயற்கை முறையில் வேளாண்மை செய்வது மற்றும் விலை பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டிலிருந்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பரிசளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி விவசாய நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை பணி; தி.மு.க கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் சமயமூர்த்தி அறிக்கை … Read more

தகவல் தெரிவிக்காமல் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை? – இந்தியாவிடம் விளக்கம் கேட்கும் பாகிஸ்தான்

இந்தியா சார்பில் கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் ஹரியானா மாநிலம் சிறுசா நகரத்திலிருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து மியா சானு … Read more

ஊசிப்புட்டான் | `துவக்கம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு வராமலா போயிடும்’| அத்தியாயம் – 25

எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டவர் ஜங்க்ஷன் அன்று கூடுதல் பரபரப்போடு இயங்க ஆரம்பித்திருந்தது. அந்தப் பரபரப்பு என்பது பொதுஜனங்களால் அல்லாமல் போலீஸ்காரர்களால் என்பதால், பொதுமக்கள் மத்தியில் அது இன்னும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது. அந்தப் பரபரப்பிற்கான காரணம். அன்று தான் புது எஸ்ப்பியாகப் பதவியேற்றிருந்த பன்னீர்செல்வம் கன்னியாகுமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி – நாகர்கோவில் சரகத்தின் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களையும் அவர் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டி வரவழைத்திருந்தார். வழக்கமாகப் புது எஸ்ப்பி பதவி ஏற்கையில் அனைத்து … Read more

விவசாய நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை பணி; தி.மு.க கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 477-ஐ நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக 60 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடைபெற்றது. இதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியதால் திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு கிடப்பில் போட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க, … Read more