`சிறந்த விவசாயிகளுக்கு பரிசுத் தொகை!' – தமிழக அரசு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயத்தில் புதிய உள்ளூர் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், புதிய எந்திரங்களைக் கண்டுபிடித்தல், இயற்கை முறையில் வேளாண்மை செய்வது மற்றும் விலை பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டிலிருந்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பரிசளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி விவசாய நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை பணி; தி.மு.க கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் சமயமூர்த்தி அறிக்கை … Read more

தகவல் தெரிவிக்காமல் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை? – இந்தியாவிடம் விளக்கம் கேட்கும் பாகிஸ்தான்

இந்தியா சார்பில் கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் ஹரியானா மாநிலம் சிறுசா நகரத்திலிருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து மியா சானு … Read more

ஊசிப்புட்டான் | `துவக்கம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு வராமலா போயிடும்’| அத்தியாயம் – 25

எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டவர் ஜங்க்ஷன் அன்று கூடுதல் பரபரப்போடு இயங்க ஆரம்பித்திருந்தது. அந்தப் பரபரப்பு என்பது பொதுஜனங்களால் அல்லாமல் போலீஸ்காரர்களால் என்பதால், பொதுமக்கள் மத்தியில் அது இன்னும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது. அந்தப் பரபரப்பிற்கான காரணம். அன்று தான் புது எஸ்ப்பியாகப் பதவியேற்றிருந்த பன்னீர்செல்வம் கன்னியாகுமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி – நாகர்கோவில் சரகத்தின் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களையும் அவர் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டி வரவழைத்திருந்தார். வழக்கமாகப் புது எஸ்ப்பி பதவி ஏற்கையில் அனைத்து … Read more

விவசாய நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை பணி; தி.மு.க கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 477-ஐ நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக 60 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடைபெற்றது. இதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியதால் திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு கிடப்பில் போட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க, … Read more

பிரமோத் சாவந்த்: நீண்ட கால திட்டம்; ஆர்.எஸ்.எஸ் தயவு… மீண்டும் முதல்வராவாரா ஆயுர்வேத மருத்துவர்?

கோவாவில் யாராலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மனோகர் பாரிக்கர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் முதல்வர் பதவிக்கு வந்தார். ஆயுர்வேத டாக்டரான பிரமோத் சாவந்த் தனது இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்த பிரமோத் சாவந்த், 2017-ம் ஆண்டு கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மனோகர் … Read more

“ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிப்பது ஏன்?” – விளக்கிய பிரதமர் மோடி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக எந்த கட்சியினாலும் அரங்கேறாத சாதனையாக பா.ஜ.க இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பா.ஜ.கவின் வெற்றி கூடத்தில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா … Read more

அம்பர்கிரிஸ்: பல கோடி ரூபாய் மதிப்பு; ரகசிய தகவலால் சிக்கிய 5 பேர்! – தப்ப முயன்றவர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு வீட்டில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கல கழிவு (அம்பர்கிரிஸ்) பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்ய முயல்வதாக ரோசனை காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (9.03.2022) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரோசனை உதவி ஆய்வாளர் அருள்தாஸ், திண்டிவனம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ரத்தக் கடலான … Read more

`மக்களின் உயிரை காப்பாற்றிய ஹீரோ’ – மோப்ப நாய் சிம்பாவுக்கு 21 குண்டுகளுடன் அரசு மரியாதை

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்பநாய் படை விரிவுபடுத்தப்பட்டது. இதில் 2013-ம் ஆண்டு மும்பை போலீஸின் மோப்ப நாய் படைப்பிரிவில் சிம்பா என்ற நாய் சேர்க்கப்பட்டது. இந்த நாய் விஐபிக்களின் பாதுகாப்பிலும், வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது. கடந்த 9 ஆண்டுகளாக மும்பை போலீஸின் … Read more

“ஏழைகள் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓய்வெடுக்கப் போவதில்லை!" – வெற்றி கூட்டத்தில் பிரதமர் மோடி

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி வியாழக்கிழமை மாலை பா.ஜ.க-வின் தேசிய தலைமையகத்திற்குச் சென்றார். நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வினர் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பிரதமர் மோடி பாராட்டினார். வெற்றி கூட்டத்தில் பிரதமர் மோடி அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இது உற்சாகமான பண்டிகைகளின் நாள். இந்த உற்சாகம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கானது. … Read more