மது போதையில் பள்ளி மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்; போக்சோவில் கைது செய்த போலீஸ்!
பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மலையப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்குக் குடித்துவிட்டு வந்ததாகவும், வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த மாணவிகளிடம் அருகில் அமர்ந்து கொண்டு உடையை மாற்றி வரச் சொல்லி யூடியூபில் பாடல்களைப் போட்டு ஆடச்சொல்லியதாகவும் கூறப்படுகிறது. பெரம்பலூர் இதனால் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையிலிருந்து வெளியேறிய மாணவிகள், இது பற்றிப் பெற்றோர்களிடம் … Read more