“தவறான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நடைமுறைகள்” : ராஜாஜியின் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ராஜாஜி இந்திய ஜனநாயகத்தை அதிகாரத்தின் மேடையாக அல்ல, மனச்சாட்சியின் வெளிப்பாடாகவே பார்த்தவர். பலர் ஆட்சியைப் பற்றியும், வெற்றியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த காலத்தில், அவர் தேர்தல் என்ற அமைப்பை பற்றி ஆழமாக சிந்தித்தார். தேர்தல் என்பது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; … Read more

உன்னாவ் வழக்கு: “நீதிபதி முன்பே இறந்திருப்பேன்" – குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் … Read more

தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? – தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி அஜிதாஆக்னல் என்பவரும் தனக்கு மா.செ., பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அவரை சில மீட்டர் தூரத்திற்கு முன்பே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், தனக்குப் பதவி இல்லை என்ற தகவலை … Read more

“சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது" – முதல்வர் ஸ்டாலின்

உலகம் முழுவதும் இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பிரச்னை செய்திருக்கின்றனர். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக சாலைகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஏழை,எளிய வியாபாரிகள் மிரட்டப்பட்டு கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சர்ச் வாசல்களில் … Read more

சிறை: "நல்ல படம் கொடுத்திருக்கோம் என நம்புறோம்” – நடிகர் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சிறை’ திரைப்படம் இன்று (டிச. 25) திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். ‘சிறை’ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த பிறகு நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சிறை படத்தில்… ” எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்றைக்கு ‘சிறை’ படம் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய குடும்பங்கள் இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள். நிறைய பேர் … Read more

“கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும்" – பினராயி விஜயன்

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், … Read more

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே ‘உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்’ எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் … Read more

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, ‘மதி’ என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர். கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள … Read more

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் – நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், … Read more