சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை வழிவகை செய்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற துவக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு … Read more

Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' – கெத்தாக சொன்ன ராகுல் காந்தி

Rahul Gandhi On Disqualification: 2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில், குஜராத் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றதற்காக, மக்களவையில் இருந்து ராகுல் காந்தி நேற்று (மார்ச் 24) தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இந்நிலையில், ராகுல் காந்தி இன்று (மார்ச் 25) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். ராணுவம், விமானத்துறை தொடர்பனா குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடனே வைத்து வருகிறேன். ஜனநாயகம் குறித்து … Read more

முதல் முறையாக அரசு தரப்பில் இன்புளுயன்ஸா தடுப்பூசி- அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திடீர் நகர் மற்றும் கோதாமேடு பகுதி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் உரியவர்களுக்கு கொடுக்கப்படுக்கும் அந்த உரியவர்கள் குடிசை மாற்று வாரிய … Read more

'அதுக்கு கூட இப்ப பணம் இல்ல’: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அளித்த பகீர் தகவல்

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானில் இந்நாட்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத மிக ஏழ்மையான நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளான கோதுமை மாவு, பருப்பு வகைகள் மற்றும் எரிபொருளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் தனது நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. … Read more

கோவைக்கு அதிமுக தான் நல்ல திட்டங்களை கொண்டு வந்தது – எஸ்பி வேலுமணி

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை எனவும் ஆளுங்கட்சியினர் கடந்த ஆட்சியைப் பற்றி விமர்சிக்காமல் மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வலியுறுத்தி உள்ளார். கோவை கோவைபுதூர் பகுதியில் சார்பில் நீர்மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பொதுமக்களுக்கு இளநீர்,பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் கோடை … Read more

மீண்டும் எகிறும் கொரோனா, 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா?

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள்: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் ஒரு நாளில் 1,590 கோவிட் -19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 146 நாட்களில் அதிகபட்சமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அதேபோல் இதில் செயலில் உள்ள தொற்றுநோய்களின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது. காலை 8 மணிக்கு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 இறப்புகளுடன் 5,30,824 ஆக உயர்ந்துள்ளது. இதில் … Read more

7th Pay Commission: அடி தூள்… டிஏ ஹைக்கை தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், கணக்கீடு இதொ!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி நேற்று வந்தது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சரவை வெளியிட்டது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.  ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் … Read more

திமுக-வினர் 27 பேரிடம் சிக்கியுள்ள ரூ. 2.24 லட்சம் கோடி: அண்ணாமலை புகார்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் கே.ஏ. ராஜேஷ் ராஜா தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.  மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- தென்காசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மாற்றம் நடந்து … Read more

விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பின்னர் தனது திறமையால் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி, திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.  ‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் பிஸியான நடிகராக மாறிவிட்டார், சமீபத்தில் இவரது நடிப்பில் ‘டான்’ மற்றும் ‘பிரின்ஸ்’ போன்ற படங்கள் வெளியானது.  தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார், … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்! மதுவில் விஷம் வைத்துக் கொன்ற மனைவி!

தியாகதுருகம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மதுவில் விஷம் வைத்துக் கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன்‌ ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த  வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த அருகே கடந்த 16.04.2021ம் தேதியன்று தனது வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்ததாகவும் சிகிச்சை பலனின்றி … Read more