TN Cabinet Meeting: கூடுகிறது அமைச்சரவை… பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து முக்கிய முடிவு – எகிறும் எதிர்பார்ப்பு!

Tamil Nadu Cabinet Meeting Today: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 20ஆம்  தேதி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு  ஒப்புதல் அளிக்கப்படும்.  மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் … Read more

புஷ்பா 2: சமந்தாவுக்கு பதிலாக வசூலில் அள்ளுவாரா சாய் பல்லவி? அல்லு அர்ஜூனின் ஜோடி யார்?

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் குறித்து தொடர்ந்து பல வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது இப்படத்தில் அல்லுவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவின் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புஷ்பா தி ரூல் திரைப்படத்தில் அனைத்து நடிகர்களின் நடிப்பு முதல் படத்தின் வசனங்கள், பாடல்கள் என … Read more

அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு

வைரலாகும் வீடியோ: பல்வேறு வகையான பாம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோக்களில், பாம்பை கண்டவுடன் மக்கள் ஒருபுறம் பயந்தால், மறுபுறம், அதை பார்த்து ரசிபப்தற்கும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதே பாம்பு, கொஞ்சம் அவர்கள் பக்கம் திரும்பினாலும், துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து ஓடி விடுவார்கள். உலகின் மிகப்பெரிய பாம்பு அனகோண்டா சாலையில் செல்வதைப் பார்த்து திகைத்த மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பாம்பைப் பார்த்தால் பதறிப் … Read more

46 சிறுமிகள் கர்ப்பம்… வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாத நிலை – அச்சமூட்டும் தகவல்கள்!

கேரளாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் வழக்குகளான POCSO வழக்குகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்குகளின் அபரிமிதமான அதிகரிப்பு என்பது பலரையும் நடுங்க வைத்துள்ளது.  கடந்த இரண்டே ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று மலையாள பத்திரிகை ஒன்று தகவல் தெரிவிக்கிறது. ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தைகள் கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயகரமான போக்கையும் இது எடுத்துக்காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், கேரளாவில் 3056 போக்ஸோ … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது அதை மாநில அரசிடமே திருப்பி அனுப்பிவிட்டார். இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என் ரவி, மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி திருப்பி அனுப்பிவிட்டார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை … Read more

வயாகராவால் வந்த வினை… தோழியுடன் உல்லாசத்தில் இருந்தவர் மரணம்- திடுக் தகவல்

சமீபத்தில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் 41 வயதான ஆண் ஒருவர், மது அருந்திவிட்டு இரண்டு வயாகரா மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவ பத்திரிகை ஆய்வு மேற்கொண்டு அதை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் அவரது உயிரிழந்ததற்கான காரணம் குறித்து முழு தகவல் வெளியாகியுள்ளது.  வயாகரா என்ற பிராண்டின் கீழ் விற்கப்படும் சில்டெனாஃபில் என்ற இரண்டு, 50 மில்லி கிராம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோது, அந்த நபர் ஒரு பெண்ணுடன் இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. … Read more

'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' – ஈஷாவின் மகளிர் தின நிகழ்ச்சி… சாதனை பெண்களுக்கு விருது!

Isha Save Soil Movement, Women’s Day Event: உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே’ என்ற நிகழ்ச்சி இன்று (மார்ச் 8) நடைபெற்றது. இதில், 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டும்  சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,”பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக … Read more

இனி விஜயகாந்துக்கு ரிலீஃப்! பல ஆண்டுகளுக்கு பிறகு நிம்மதி பெருமூச்சு விடும் தேமுதிக

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், … Read more

Oscars 2023: 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஓட்டு போட்டாரா சூர்யா…?

Oscars 2023 Actro Suriya: இந்தாண்டுக்கான விருது விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் லான் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் வரும் மார்ச் 13ஆம் தேதி ஆஸ்கார் 2023 விருது விழா நடைபெறுகிறது. இவ்விழா இந்தியாவில், மார்ச் 13ஆம் தேதி அதிகாலையில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. முதல் தமிழ் நடிகர்  இந்த விழாவில் அளிக்கப்படும் விருதுகள், ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினர்களின் வாக்கின் மூலம் இறுதிச்செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினர்கள் … Read more

Comfort Women: ’ஆறுதல் அளித்த’ பாலியல் அடிமைகளை உருவாக்கிய ஜப்பான்! அதிகார துஷ்பிரயோகம்

Second World War And Women: உலகம் முழுவதும், மார்ச் 8 ஆம் தேதி பெண்களுக்கான சிறப்பு நாளாக, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகவும் பேசப்படும் ஆறுதல் பெண்கள் (Comfort Women). உலகப் போரின் போது அவர்கள் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றிய கதை இந்த தலைமுறையினருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டிய விஷயம். பெண்களின் உரிமை என்பது உலகில் எந்த நிலையில் இருந்தது என்பதைத் தெரிந்துக் கொண்டால் தான், மகளிர் தினம் … Read more