இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கான உரிமம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கப்படும் என்று கைத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பான் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் (22) ஜப்பான் செல்லும் 12 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவிற்கும் இஸ்ரேலுக்கு பணிக்காகச் செல்லும் நான்கு பேர் கொண்ட குழுவிற்கும் விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு … Read more

இலங்கையின் பொருளாதாரத்திற்கு வீழ்ந்துள்ள மற்றுமொரு பாரிய அடி

அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். பயணிகள் வருகையில் வீழ்ச்சி கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  கொரோனா காலப்பகுதியில் நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு எனினும் … Read more

போலி கடவுச்சீட்டுடன் இங்கிலாந்து செல்ல முயன்ற நபர் கைது

போலி வீசா மற்றும் கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுங்கேணியைச் சேர்ந்த 32 வயதுடையவர். டோகா கட்டரின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முற்பட்ட வேளையில், விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் கழிவறையை பயன்படுத்தியதற்காக பணம் அறவிட்ட நபர்

ஹோமாகம பகுதியில், பொதுமகன் ஒருவர் கழிவறையை பயன்படுத்தியதற்காக 100 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.   ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபரிடமே இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளது. எரிபொருள் வரிசையில் பல நாட்கள் வரிசையில் காத்திருந்த நபர், கழிவறைக்குச்  செல்வதற்காக அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று கேட்டுள்ளார். நூறு ரூபா பணம் வசூலித்த கடை உரிமையாளர்  அந்த கடை உரிமையாளர் கடையின் பின்னால் உள்ள கழிவறையை காட்டி அங்கு செல்லுமாறு கூறியுள்ளார்.  கழிவறைக்குச் சென்று மீண்டும் திரும்பும்போது … Read more

நாட்டில் மதுபானத்துக்கான தேவை 30% இனால் குறைவடைந்திருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது

நாட்டில் அண்மைக்காலமாக மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டில் பொது மக்களின் வருமானம் குறைந்தமை காரணமாக மதுபானத்துக்கான தேவை 30% இனால் குறைவடைந்திருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் (20) கூடியபோதே இவ்விடயங்கள் வெளிப்பட்டன. விசேடமாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்குத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஒன்லைன் முறையின் கீழ் … Read more

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் , திட்டங்கள் தொடர்பில் ஆராய கோப் குழுவை விசேடமாகக் கூட்டுவதற்குத் தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராய கோப் குழுவை எதிர்காலத்தில் விசேடமாகக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மின்சார சபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில்  (21) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் (கோப் குழு) கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. முன்னதாக கடந்த 10ஆம் … Read more

இரண்டரை வயதுடைய இலங்கை சிறுவனின் உலக சாதனை! குவியும் பாராட்டுக்கள்(Photo)

கேகாலை, தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம்  கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில்தனது பெயரை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், பெருமை சேர்த்துள்ளார். அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது சிறுவன் எனும் உலக அந்தஸ்தை அச்சிறுவன் தனதாக்கிகொண்டார். இரு வயதில் சாதனை   ஏற்கனவே இதே சாதனையை நிகழ்த்தி ஆசிய … Read more

மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு 82 மில்லியன் டொலர்

வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ,மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு 82 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற சுகாதாரத்துறை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்  இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,மருந்து மற்றும் மருந்து தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் 260 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை ஊழியர்களின் போக்குவரத்து … Read more

யாழில் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் எரிபொருள்

யாழ்ப்பாணத்தில் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு ஒரு லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் தலா 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. கறுப்பு சந்தை விவசாயம் செய்பவர்கள் மற்றும் அத்தியாவசிய பயணங்கள் செல்பவர்கள் கறுப்பு சந்தையில் அதிக விலை கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்பவர்கள் மோசடியான முறையில் பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது. எரிபொருள் மோசடி பல்வேறு … Read more