களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல்  மற்றும் படகுகள், கப்பற் தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்…

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் மற்றும் படகுகள், கப்பற் தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே அவர்கள், இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.   ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2022-03-10

இலங்கையில் அதிர்ஷ்டமும் இல்லை! கவலையில் மக்கள்

இலங்கையில் தற்போது அதிர்ஷ்டமும் இல்லை என அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களை கொள்வனவு செய்யும் நபர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்களை அச்சடிக்கும் காகிதத் தாள் தட்டுப்பாட்டினாலேயே அதிர்ஷ்ட லாப சீட்டுக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பற்றி தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லொத்தர் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக 12 வகையான நாளாந்த அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்கள் விற்பனைக்காக கிடைப்பதாகவும் ஆனால், தற்போது 5 வகையான டிக்கெட்டுக்களே கிடைக்கின்றன. அவையும் கேள்விக்கு குறைந்த அளவிலேயே கிடைப்பதாகவும் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர். … Read more

ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளருடன் சந்திப்பு

துணைத் தூதுவர் அனுர பெர்னாண்டோ 2022 பெப்ரவரி 23ஆந் திகதி சீனாவின் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஃபூ ஜிஹோங்கை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.  2022ஆம் ஆண்டு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவையும் ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 70வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. சகோதர நகரங்களாக, ஷாங்காய் மற்றும் கொழும்பு பல துறைகளில் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.  இரு தரப்பினரும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் … Read more

கிழக்கு மாகாணத்தில் 1,272 சிறுவர்கள் ,சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் பராமரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட செயலமர்வு இன்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில், அனாதைகள், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான சேவையினை ஆற்றிவருகின்ற சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் திருகோணமலையில் தலைமைக் காரியாலத்தினையும், கிழக்கு மாகாணத்திலுள்ள … Read more

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரம் வரையில் நீடிக்கும்

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சமையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், ரெஸ்டுரன்ட்கள் மூடப்பட்டுள்ளன. சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, சுமார் 2600 மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு இன்றையதினம் சந்தைக்கு விடப்பட்டதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் … Read more

தவறான  செய்திகளை வெளியிட்டு பாராளுமன்றம் , உறுப்பினர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுக்கு எதிராக நடவடிக்கை

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடு இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு சதி செய்து சீர் குலைப்பதாயின் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை அழைத்து கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். பேச்சு சுதந்திரம் மற்றும் செய்திகளை வெளியிடும் … Read more

இடி மழையுடன் பலத்த காற்று

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கிய ரஷ்ய ராணுவம்! பீதியில் மக்கள்

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் போர் நிலை உக்கிரமடைகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்ய படைகள்  உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கி இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் கீவை நோக்கி 80 கி.மீ தொலைவு வரை ரஷ்ய படைகள் முன்னேறி இருக்கின்றன. எப்போது குண்டு விழும்? … Read more

இந்தியாவில் புதிதாக 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 4ஆயிரத்து 184 பேர் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் இந்திய மாநிலமான கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து 15ஆயிரம்து 459 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4Mapuj;J 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளdu;. இதில் … Read more

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 … Read more