கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன

இலங்கை பெற்றுள்ள கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ,இலங்கைக்கு இன்னமும் கடன் செலுத்துவதற்கான வல்லமை காணப்படுவதாகவும் கூறினார். தமது தீர்மானங்களையும் கொள்கையையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கும் நிதியமைச்சருக்கும் அவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கி என்ற அடிப்படையில் அதன் நிலைப்பாட்டையும் நாட்டிற்குச் செய்ய வேண்டிய விடயங்களையும் அரசியல் பேதம் இன்றி தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். பணிப்புரை வழங்குவது மத்திய வங்கியின் பொறுப்பாகும். … Read more

நாளை மறுதினம் பாடசாலை ஆரம்பம்! வெளியானது புதிய அறிவிப்பு

நாளை மறுதினம் (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து … Read more

கண்டி-தெமோதர சுற்றுலா ரெயில் சேவை இன்று ஆரம்பம்

கண்டி – தெமோதர சுற்றுலா ரெயில் சேவை இன்று (05) முதல் ஆரம்பமாகும். கண்டியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில் பிற்பகல் 2.45ற்கு தெமோதரரையை சென்றடையும். பேராதனைச் சந்தி, கெலி-ஓயா, நாவலப்பிட்டி, ஹட்டன், கிரேப் வெஸ்டன், நானு-ஓயா, பட்டிபொல, ஒஹிய, இந்தல்கஸ்ஹின்ன, ஹப்புத்தளை, எல்ல மற்றும் தெமோதர ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிறுத்தப்படும். அதேபோல் கொஸ்டல் நீர்வீழ்ச்சி, சிவனொளிபாதமலை, சென் கிளயார் நீர்விழ்ச்சி, எல்ஜின் நீர்வீழ்ச்சி, ஒன்பது வளைவுப்பாலம் ஆகிய சுற்றுலா … Read more

இலங்கையில் ஒரு டொலருக்கு 240 ரூபா! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு அதிக பணம் அனுப்புவது வழக்கம். எவ்வாறாயினும், இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தமது பணத்தை … Read more

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் சாதனமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது – மனித உரிமைகள் ஆணையாளர்

மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை இனங்கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்சல் பச்லட் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் கூடுதலாக ஈடுபடுவதை அண்மைக்காலத்தில் காணமுடிந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலமை தொடர்பில் விரைவில் தீர்மானிக்குமாறும் குற்றவாளிகளை … Read more

தாமதமாக வந்த மாப்பிள்ளை! தாறுமாறாக பாடம் கற்பித்த மணப்பெண்

பொதுவாக திருமணங்களில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதேபோன்று, தற்போது மணமக்கள் கோபப்பட்டு அடிதடியில் முடியும் காட்சி அதிகமாக வலம் வருகின்றது. தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் ஒரு வீடியோவிலும் இதே போன்ற ஒரு சண்டையைக் காண முடிகின்றது. ஆசையாக மணமகள் காத்திருக்க மணமகன் திருமண மண்டபத்துக்கு மிகவும் தாமதமாக வருகிறார். இதனால் கடுப்பான மணமகள் திருமணத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் முன்பு அவர் மீது கோபப்படுகிறார். மணமகளின் கோவத்தால் ஆத்திரமடையும் மணமகனும் மணமகள் மீது கோபம் கொள்கிறார். … Read more

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான ஆலோசனை

உக்ரைனில் நிலவுகின்ற சமீபத்திய நிலைமையின் அபிவிருத்தியின் பின்னணியில், பெலாரஸுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பெலாரஸின் நிலைமையை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. ஏறக்குறைய 1,561 இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியில் ஈடுபடுகின்ற பெலாரஸில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தூதரகம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினர், மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோருடன் தூதரகத்தால் நடாத்தப்பட்ட சந்திப்புகளில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இலங்கைக்கு தற்காலிகமாக … Read more

இலங்கையை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாதங்களுக்கு ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். ரொஷான் ரணசிங்கவிற்கு மூன்று மாத விடுமுறையில் செல்ல நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. அமைச்சின் செயற்பாடுகளால் விரக்தியடைந்துள்ள நிமல் லன்சா, சில … Read more

பசில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் நீக்கிவிட்டு தனித்து ஆட்சியமைக்க பசில் திட்டமிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவான 11 கட்சிகளின் தலைவர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் பசில் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுன கட்சியில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் பசில் ராஜபக்ஷ … Read more

இலங்கை மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நன்மை

தனியார் வாகனங்களில் பயணிக்கும் 10 சதவீதமானோர் பொது போக்குவரத்தினை பயன்படுத்தினால் 26 பில்லியன் ரூபாவை அரசாங்கத்தினால் சேமிக்க முடியும் என இலங்கை நிலையான வளசக்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விசேடமாக மேல் மாகாணத்தில் மேலும் 10 வீதமான மக்களை பொதுப் போக்குவரத்தில் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் 7 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் … Read more