மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை:விவசாயிகளுக்கு விசேட திட்டத்தில் எரிபொருள்

மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது. நெல் அறுவடை செய்பவர்களுக்கு எரிபொருளை வழங்க விசேட நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டிசல் மற்றும் ஏனைய எரிபொருட்களை, அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நெல் அறுவடை செய்பவர்களுக்கு என மன்னார் மாவட்டத்தில் எரிபொருளை வழங்க விசேட நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. … Read more

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வெளியிடும் நாடுகளின் பட்டியலுக்குள் இணைந்த இலங்கை

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவு செய்ததையடுத்து, உலகின் பல நாடுகளின் தலைவர்கள் அந்த முடிவுக்கு எதிராக நிற்க முடிவு செய்தனர். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள், மருந்து மற்றும் பிற உதவிகளை வழங்க ஏற்கனவே முன்வந்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படையெடுப்பினால் இதுவரையில் உக்ரைனில் ஏறக்குறைய 2,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் உலகின் பல … Read more

 ஆடை தயாரிப்பு ஏற்றுமதி மூலம்  ஜனவரி மாதத்தில் 488 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இலங்கையின் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி மூலம்  5 வருடங்களிலும் பார்க்க 488 மில்லியன் அமெரிக்க டொலராக உச்ச தொகையினை பதிவு செய்துள்ளது. கொரோனாவின் அதீத தொற்று காலங்களிலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கை இத்துறை வளர்ச்சிக்கு பெருமளவு உதவியாக அமைந்துள்ளதாக இலங்கையின் ஒன்றிணைந்த ஆடை சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆடை தொழில் துறையில் உள்ள ஊழியர்களில் 65% பேருக்கு வைரசு தொற்று தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வழங்கப்படுள்ளதுடன் 95% பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. … Read more

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்! – ஐநா நிபுணர்கள் கோரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு இணங்க சட்டத்தை கணிசமான முறையில் மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். “தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படும் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து உள்ளது. குறிப்பாக மத மற்றும் இன சிறுபான்மையினர், மேலும் சட்டத்தின் பயன்பாடு பயனுள்ள முறையான செயல்முறை … Read more

இலங்கைக்கு டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று

டீசலுடனான கப்பல் ஒன்று, இன்று (02.03.2022) இலங்கைக்கு வர உள்ளது. இதற்கு செலுத்த வேண்டிய டொலர்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். மேலும், மற்றுமொரு டீசல் கப்பலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த டீசல் கப்பல்கள் கிடைத்தவுடன், தற்போது நிலவுகின்ற டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ள இலங்கை! – கொழும்பு ஊடகம் தகவல்

 கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், போர் தொடுப்பதற்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிரான … Read more

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்பு  

2022 பெப்ரவரி 28ஆந் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமைச்சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் 2022 பெப்ரவரி 28ஆந் திகதி உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டனர். ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் … Read more

ரஷ்யாவிற்கு விழுந்த மற்றுமொரு அடி! அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த முடிவு

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் … Read more

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (02) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு கௌரவ பிரதமர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய … Read more

ரஷ்யாவிற்கு விழுந்த மற்றுமொரு அடி! அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த முடிவு

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் … Read more