கொழும்பு நட்சத்திர ஹொட்டலில் மனைவியிடம் வசமாக சிக்கிய இளம் அமைச்சர்

அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹொட்டலுக்கு சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு கீழ் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீண்டகாலத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட இளம் அமைச்சர், தனக்கு நெருக்கமான ஒருவர் ஊடாக கொழும்பில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டலில் அறை ஒன்றை முன் பதிவு செய்துள்ளார். இளம் அமைச்சரின் முன்னாள் காதலி ஒருவரும் … Read more

சட்டவிரோத மணல் அகழ்விலிருந்து கிளிநொச்சி காப்பாற்றப்படுமா? (Photos)

Courtesy: மு.தமிழ்செல்வன் கடந்த 24.01.2022 அன்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்  றூபவதி கேதீஸ்வரன் பின்வருமாறு தெரிவித்திருந்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. மாவட்டத்தின் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் மாவட்டத்தின் மிகப்பெரும் வளமான இரணைமடுகுளத்திற்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமுண்டு, மாவட்டத்திலிருக்கின்ற மிகப்பெரும் வளத்தை நாம் இழக்க முடியாது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்தவாரம் அதே மாவட்டச் செயலகத்தைச் சேர்ந்த மாவட்ட உதவித் … Read more

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று(20) அவர் மேலும் தெரிவிக்கையில், ”மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் … Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாளைய தினம் தென் மாகாணத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.   எனினும், நாளைய தினம் நாடு பூராகவும் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்றும் தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தாா். நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே தென் மாகாணத்தில் மின்வெட்டை  நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  நாளை தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான நேரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் அவ்வாறு ஏனைய பகுதிகளில் … Read more

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னணியில் இருக்கும் பெரிய கதை! ஞானசாரர் அதிரடி

அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டுள்ள சர்வதேச நகர்வுகள் அதனை அடுத்து ஜனாதிபதி மற்றும்  ஒரு சில அமைச்சர்களின் கருத்துக்களை அவதானிக்கும் போது யாரோ ஒரு சிலரது தூண்டுதலுக்கு அமைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவே தெரிகின்றது என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது … Read more

நாட்டில் ரூபா இருப்பிற்கும் நெருக்கடி! அமைச்சர் வழங்கும் தகவல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவிற்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்பிற்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் கொள்வனவிற்கான ரூபாவை திரட்டிக்கொள்வதில் பாதிப்பு ஏற்படும். எரிபொருள் விநியோகத்தில் பாரிய நட்டத்தை கூட்டுத்தாபனம் எதிர்கொள்கிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பலமுறை கோரிக்கையை முன்வைத்துள்ளது. தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் இறக்குமதிக்கான … Read more

நாட்டில் அதிகரிக்கும் ஆபத்து! விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்: செய்திகளின் தொகுப்பு

ஒக்சிஜன் வழங்கப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்தது. அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கோவிட் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார். 5700 கோவிட் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 2650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறினார். இது … Read more

அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்பாடு தொடர்பில் கட்டுப்பாடு

அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறியினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டங்கள் , கலந்துரையாடல்களுக்கு வெளி மாகாணங்களில் இருந்து வரும் அதிகாரிகள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார். Source … Read more

வெளிநாடு ஒன்றில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட இலங்கை பெண்

இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்காக பணிப்பெண்ணாக சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை வீட்டு உரிமையாளர் தடுத்து வைத்து மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். தான் சுகயீனமடைந்த நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர் தன்னை விடுவிக்க பல லட்சம் ரூபாய் பணம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனவும் தன்னை … Read more

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு – சூசகமாக தகவல் வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தங்க்ள மேற்கொள்வதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை பாதிக்கும் குறைவாகவே உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். நாடுகள் பலவற்றின் எரிபொருள் விலை அட்டவணையையும் பதிவிட்டு, அவர் … Read more