பல மணிநேர தொடர் மின் துண்டிப்புக்கு தயாராகுங்கள்! பொதுமக்களுக்கான அறிவிப்பு வெளியானது
நாட்டில் 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்காக எச்சரிக்கை காணப்படுவதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link