எந்த ஒரு உடன்படிக்கையின் போதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை நாம் புறக்கணித்துவிட மாட்டோம் – பிரதமர்

உழைக்கும் மக்களின் இரத்தத்தினாலும் வியர்வையினாலும் போசிக்கப்பட்ட பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தாய்நாட்டில் 137வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் மத்தியிலேயே இன்று நாம் அதைக் கொண்டாடுகிறோம். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட உலகின் பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்தினாலேயே மீண்டெழுந்தன. அது எமது பாரம்பரியமும் கூட. பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு விவசாயிகள் ஒரு ஆரம்பத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். முதலில் நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். … Read more

மலையகத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்(Photos)

 தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை எளிமையான முறையில் – உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது. அந்தவகையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகங்களிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் அமைந்துள்ள தோட்டங்களிலும் மேதின நிகழ்வுகள் நடைபெற்றது. ஹட்டனில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்ததலைவர்களான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர்.ஆறுமுகன் … Read more

நாட்டில் செயற்கை நுண்ணறிவின்(Artificial Intelligence) பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி

நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட … Read more

எதிர்கால பொருளாதாரம் குறித்து ஜனாதிபதியின் முயற்சி! வெளியிடப்பட்டுள்ள தகவல்

இலங்கையின் நாடாளுமன்றம் எதிர்பார்க்கப்படும் பிணை எடுப்பு பற்றி விவாதித்துள்ள போதிலும், நாட்டின் வளர்ச்சிக்கான நீண்ட கால தீர்வுகள் நழுவி தப்பித்துக் கொள்கின்றது என கானா நாட்டின் முக்கிய செய்தித்தளமான நியூஸ் கானா கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறுகிறார் என்பதனையும் நியூஸ் கானா என்ற செய்திச்சேவையே தெரிவித்துள்ளது. எனினும் அவர் எதிர்காலத்திற்கான பொருளாதார கணிப்புகளில் ஒரு நேர்மறையான சுழற்சியை முன்வைக்க முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடுமையான நிபந்தனைகள் … Read more

“Women Plus Bazaar 2023” கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கைப் பெண்களை வலுவூட்டும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Women Plus Bazaar 2023” கண்காட்சி (30) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் ஆரம்பமானது. கொழும்பில் உள்ள எகிப்து அரபுக் குடியரசு தூதரகம், கொழும்பு மாநகர சபை மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள்பேரவை ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. உள்ளூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் … Read more

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more

தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர். வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மே தினத்தை கொண்டாடும் நேரத்தில், நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்ததால், அனைவரும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சவாலான காலங்களில் பொருளாதாரத்தை … Read more

பெண் வேடமிட்டு வந்த கொள்ளையனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

பொகவந்தலாவை ஆரியபுர காலனி வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகளை திருட பெண் வேடமிட்டு வந்த நபர் பிடிபட்டுள்ளார். குறித்த வீட்டில் வசிக்கும் இல்லத்தரசி சண்டையிட்டு அந்த நபர் கொண்டு வந்த இரண்டு கத்திகளையும் கைப்பற்றியுள்ளார். நேற்றைய தினம்  (30.04.2023) அதிகாலை 1.30 மணியளவில் வீட்டிலுள்ள நாய் குரைத்த நிலையில், வீட்டினுள் இருந்த பெண் வெளியே வந்து பார்த்துள்ளார். அங்கு புர்கா அணிந்து வந்த நபருடன் இந்த பெண் மல்லுக்கட்டிய போது புர்கா கீழே விழுந்துள்ளது. புர்காவை கழற்றிய பின், … Read more

கைத்துப்பாக்கியுடன் சுற்றிதிரியும் உக்ரைன் ஜனாதிபதி! வெளியான காரணம்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கியொன்றினை வைத்துக்கொண்டு சுற்றிதிரிவதாக வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். ரஷ்ய படைகளின் வான்வழி தாக்குதலில் உக்ரைனியர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், செய்தி சேவையொன்றுக்கு ஜெலன்ஸ்கி வழங்கிய பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது ரஷ்ய படைகளிடம் சிறைபிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்வீர்களா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியையும் அவர் நிராகரித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கைத்துப்பாக்கியை வைத்து எப்படி சுட வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும். உக்ரைனின் … Read more

மாத தொடக்கத்தில் அதிஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிப்பலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் கிரகங்களின் பெயர்ச்சியால் நாளைய தினம் உயர்ச்சி பெற போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம், உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN … Read more