ஜனாதிபதி செயலாளருக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை திறம்பட தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். வீண் விரயம், ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதிய கொள்கைக்கு ஜப்பான் … Read more

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவிடம் வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டதாரியாவார். பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள … Read more

பாடசாலைகள் விடுமுறை தொடர்பான அறிவித்தல்..

2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் (இன்றுடன்) 2024 நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும். அதற்கமைய, நாளை (23) முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கப்படும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 2024.12.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்பதுடன், டிசம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் விடுமுறை காலம் ஆரம்பமாகும். அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் … Read more

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை (2024-11-21) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.

இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் அது முக்கியமானது. எமது நாட்டின் தேர்தல் முறையில் அதிகளவான எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு என அனைத்து மாகாணங்களும் மக்களும் அதற்கு பங்களிப்பு செய்துள்ளன. இனவாதத்திற்கு இடமளிக்கப்படாது இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் … Read more

பண்டிகை காலத்திற்கு முன்னர் நாட்டரிசி சந்தைக்கு – வர்த்தக அமைச்சர்

சந்தையில் காணப்படும் அரிசியின் நிலைமை குறித்து குறுகிய காலத் தீர்வாக நாட்டரிசி 70,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அவ்வாறு இந்த அரிசி இறக்குமதிக்கு இலங்கை சதொச மற்றும் இலங்கை அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு … Read more

பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் 02. நாமல் கருணாரத்ன – விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் 03. வசந்த பியதிஸ்ஸ – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் 04. நலின் ஹெவகே – தொழிற்கல்வி பிரதி … Read more

வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்; – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

கிராமம், நகர்ப்புறம் மற்றும் குறிப்பாக மலையகத்திலும் வாழும் வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (21) பத்தாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் சிம்மாசன உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், 70 முதல் 80 வயது வரை வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான உணவு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, வாழ்வதற்கு வீடு, வருமான வழி மற்றும் மன நிம்மதி … Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்காக நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற தகவல் கருமபீடம் வெற்றிகரமாகப் பூர்த்தி

ஒன்லைன் முறைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் பெறப்பட்டன பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக 2024 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்” வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்டது. இதில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இங்கு உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை … Read more

10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரை முன்மொழிந்தார். அதனை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆமோதித்தார். புதிய சபாநாயகருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி சேனாதீர, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

புதிய பாராளுமன்றத்தின், பிரதி சபாநாயகர், சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா ஆகியோர் தெரிவு

புதிய பாராளுமன்றத்தின், பிரதி சபாநாயகர், சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா ஆகியோர் தெரிவு செய்யப்படனர். பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி 10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இன்று பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் பிரதி சபாநாயகரின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி பொல்ராஜ் அதனை ஆமோதித்தார்.இதனைத் தொடர்ந்து, 10வது பாராளுமன்றத்தின் சபைத்தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவு … Read more