10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியர் கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி தெரிவு

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி 10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார். சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் பிரதி சபாநாயகரின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி பொல்ராஜ் அதனை ஆமோதித்தார்.

அரசாங்கம் நெல் உற்பத்திற்கு வழங்கும் நிவாரணம் நுகர்வோருக்கும் கிடைக்க வேண்டும் – வர்த்தக அமைச்சர் 

அரசாங்கம் நெல் உற்பத்திக்கு வழங்கும் நிவாரணத்தை நுகர்வோருக்கும் கிடைக்கப் பெறச் செய்வது அவசியம் என வர்த்தக, வாணிபத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  மக்களை அழுத்தத்திற்கு உட்படுத்தாதிருப்பதற்காக அரசாங்கம் அவசியமான சந்தர்ப்பங்களில் குறுங்கால மற்றும் நீண்ட கால கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதாக அமைச்சர் விபரித்தார்.  தற்போதும் மாவட்ட மற்றும் … Read more

திரு.மகிந்த சிறிவர்தன நிதி அமைச்சின் செயலாளராக மீண்டும் கடமைகளை அரம்பித்தார்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். திரு.மகிந்த சிறிவர்தன இன்று (20) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கும், இந்நாட்டில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் வெற்றிக்கும் அவர் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பொருளாதார அபிவிருத்தியில் முதுகலைப் டிப்ளோமாவையும், களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். திரு. சிறிவர்தன ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார், … Read more

வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதிக்கிடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க  நேற்று முன்தினம் (18) ஆளுநர் செயலகத்தில் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பின் போது யாழ்  தீவுப்  பகுதி மக்களின் கடல் மார்க்க போக்குவரத்து மற்றும்  தீவுகளில் வசிக்கும்  மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்துடனான ஒரு நாள் சுற்றுப்போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியில் மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் 2 – 0 என இலங்கை அணி நேற்று (19) வெற்றியீட்டியுள்ளது. மழையுடனான காலநிலை காரணமாக நேற்று (19) இடம்பெற்ற மூன்றாவது மற்றும் இறுதி போட்டி முடிவுகள் இன்றி நிறைவுபெற்றமையினால் போட்டியில் 2-0 என்ற அடிப்படையில் இலங்கை அணிக்கு இச்சுற்றுப் போட்டியை வெற்றி கொள்ள முடிந்தது. போட்டி முழுவதும் 217 ஓட்டங்களை சேகரித்த குசல் மெண்டிஸ் ஆட்டத்தின் … Read more

இலங்கை பொலிஸ் சேவை அரசியல் மயமாக்கமின்றி பொதுமக்கள் சேவையாக மாற்றப்படும் –

இலங்கை பொலிஸ் சேவை அரசியல் மயமாக்கமின்றி பொதுமக்கள் சேவையாக மாற்றப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் இலங்கை பொலிஸ் சேவையை அரசியல் மயமாக்கமின்றி மக்கள் சேவையாக மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு இலங்கை பொலிஸ் சேவையை மேலும் முன்னேற்றுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராகத் தனது கடமைகளை நேற்று (19) பத்தரமுல்லை, சுகுருபாய … Read more

சட்டத்தின் ஆட்சி என்பதனால் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் – நீதி அமைச்சர்

நாட்டின் ஆட்சியாளர்கள் முன்னுதாரணமாக சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டால், மக்களும் சட்டத்தை மதிப்பார்கள் என்றும் நீதி அமைச்சரின் கடமை வழக்கு விசாரிப்பது, அதற்காக செயல்படுதல் அன்றி அவசியமான வசதிகளை வழங்குவதே என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். நீதி அமைச்சர் தனது கடமைகளை உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கும் வைபவத்தின் போது இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நாடொன்றில் பொருளாதார சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக சட்டத்தின் … Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது  இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல், சப்ரகமுவ, மத்திய, … Read more

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 44(2)வது உறுப்புரையின் பிரகாரம் பின்வரும் அமைச்சர்கள் 2024 நவம்பர் மாதம் 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு:

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.  அவர்களின் பெயர் விபரம் வருமாறு..   01. பிரதமரின் செயலாளர் – பீ.பீ. சபுதந்திரி   02. அமைச்சரவையின் செயலாளர் – டபிள்யூ. எம்.டீ.ஜே.பெர்னாண்டோ     03. சிரேஷ்ட பேராசிரியர் கபில சீ.கே.பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் … Read more