பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, பரீட்சை திணைக்களத்தின் வசதிக்கு அல்ல

மாணவர்கள் சிரமப்படாமல் பழக்கமான சூழலில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பின்னணியை அமைப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும் – ஜனாதிபதி வலியுறுத்தல். தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இதன்படி, குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் … Read more

ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, … Read more

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள மற்றும் புதுப்பிக்க ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் யூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் … Read more

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன வலியுறுத்தினார். சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களான நன்னடத்தை மற்றும் சிறுவர் … Read more

நீர்வளத்துறை மறு சீரமைப்புக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என எதிர்பார்ப்பு

நீர்வளத்துறை மறு சீரமைப்புக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான ஒப்பந்தங்களை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.மூன்று ஆண்டு … Read more

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை புன்னியஸ்தலத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் ஜனாதிபதியால் கையளிப்பு

புனித பூமியின் புனரமைப்புப் பணிகளில் இணைந்து கொண்ட ஒரே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே – விஹாராதிபதி தேரர் தெரிவிப்பு. வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய வண. உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் கையளித்தார். … Read more

நீதி அமைச்சு ஏற்பாடு செய்த நடமாடும் சேவையில் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்

நீதி அமைச்சினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் நடமாடும் சேவையில் ஆயிரக்கணக்கான மக்கள் சேவையினை பெற்றுக்கொண்டனர். நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த சனிக்கிழமை (27) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, இடம்பெற்ற, இச்சேவையில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா உட்பட சகல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், 14 … Read more

நாடு பூராகவும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 மே 29ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாடு பூராகவும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு

தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும், ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும் ஒதுக்கப்படும். கார் வகைக்கான ஒதுக்கீடு வாரத்திற்கு 40 லீற்றராக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை … Read more

சிலாபம் களப்பினால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தலுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ்

சிலாபம் களப்பு மாசடைதல் தொடர்பான பிரச்சினையை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து தீர்வைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். சிலாபத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிலாபம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சிலாபம் களப்பினுள் அப்குதியிலுள்ள இறால் பண்ணைகளால் வெளியேற்றப்பப்படும் இரசாயனம் கலந்த கழிவுநீர் மற்றும் சிலாபம் நகர சபை, சிலாபம் பொது வைத்தியசாலையிலிருந்து … Read more