நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். இன்றையதினம்(25.05.2023) சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் இணைந்து இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு தொடர்பான தேசிய கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் … Read more

கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையேயான சந்திப்பு நேற்று (24.05.2023) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளில், VMS எனப்படும் படகுகளை கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதன் அவசியத்தையும், … Read more

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா 24 மற்றும் 25ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் திறந்த மைதானத்தில் இடம்பெறுகிறது. மூன்று அமர்வுகளில் இடம்பெறும் இந்நிகழ்வில் 2500 இளமாணிப் பட்டம், 1286 பட்டப்பின் படிப்பு மற்றும் 03 விசேட பட்டங்களும் வழங்கப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். இந்நிகழ்வு நேற்று (24) முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளில் இடம்பெற்றதுடன், இன்று (25) முற்பகல் ஒரு அமர்வுமாகவும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மூன்றாவது அமர்வின் போது … Read more

வடக்கு தொடருந்து சேவை ஜூலை 15 முதல் மீண்டும் ஆரம்பம்!

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று தொடருந்து  திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் தொடருந்து  சேவையை ஆரம்பிக்க முடியும் என்று மஹவ – ஓமந்தை தொடருந்து  வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார். இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் அநுராதபுரம் முதல் வவுனியா வரையான தொடருந்து  மார்க்கத்தின் திருத்தப் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. குறித்த … Read more

இன்றைய பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற அமர்வு இன்று (25) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. டபிள்யூ.பி.டி. தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 12.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, (i) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை,(ii) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,(iii) … Read more

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடவடிக்கை

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வழிவகைகள் பற்றிய குழுவில் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அஷ்வசும கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் … Read more

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டில் இராணுவ காற்பந்து வீரர்கள் சாம்பியன்ஸ்

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு – 2023 (ஆண்கள்) காற்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்றதில் இலங்கை இராணுவ காற்பந்து வீரர்கள் இரண்டு கோல்களை அடித்து காற்பந்து ரசிகர்களை பரவசப்படுத்தினர். இரு அணிகளும் தீவிரமாக விளையாடிய போதிலும் இலங்கை இராணுவ காற்பந்து வீரர்கள் கடற்படை அணியை தோற்கடித்து வெற்றியைடைந்தனர். இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கோப்ரல் எல்சிஎஸ்கே மென்டிஸ் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்எஎ. … Read more

அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகன முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக கோபா குழுவினால் 2023.03.23 ஆம் திகதி பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் 2023.03.23ஆம் ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கூடியபோது அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் திகதிகளுடன் கூடிய வேலைத்திட்டமொன்றை 2023.05.15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அறிவுறுத்தி பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இதற்கு அமைய அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை … Read more

நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை!!

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சினால், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2023.05.27 திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் இம்மாபெரும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான மாபெரும் நடமாடும் சேவை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு … Read more

வடக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உடனான சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள … Read more