இலங்கையில் வெற்றிலையில் இருந்து புதிய கண்டுபிடிப்பு!

வெற்றிலையைப் பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார். வெற்றிலையைப் உபயோகித்து பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது. இதேவேளை, வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், புகையிலைக்கு பதிலாக அதிக … Read more

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெறுவதற்காக இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் மோசடிகளில்

பிரித்தானியாவிற்குள் அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்வதற்காக இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரதான ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தினை அம்பலப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெல் விவசாயியான ராதா என்பவர் பிரித்தானியாவிற்கு செல்வதற்காக 50,000 ஸ்ரெலிங் பவுண்ட்களை முகவர் ஒருவரிடம் கொடுத்து அங்கு சென்றுள்ளார். அம்பலமான தகவல் இதன்போது கொழும்பு விமான நிலையத்தை அடைந்தபோது அறிமுகம் இல்லாத பெண் ஒருவரை காண்பித்து அவருக்கு கணவராக நடிக்குமாறும், சிறுவனை … Read more

சீன அரசாங்கத்தின் மண்ணெண்ணெய் – கடற்றொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு

காலத்தின் தேவையறிந்த உதவிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட, மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 128 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக 27,000 மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 150 லீற்றர் … Read more

 நலன்புரி நன்மைகள் ஜூலை முதல் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும்

அதிக வருமானம் பெறுவோர் சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி உதவிகளைப் பெறுவோர் கட்டமைப்பில் தன்னிச்சையாக இருந்து நீக்கப்படுவர். மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாய் உதவி.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை … Read more

ஜப்பான் – இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது

ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் திங்கட்கிழமை (மே 22) நடைபெற்ற வைபவத்தில் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு வாகனம் மற்றும் இரண்டு ஏணிகளையும் அன்பளிப்பு செய்துள்ளது. மேலும், தூதுக்குழுவினர் விமானப்படை வீரர்களின் பாடசாலை மாணவர்களுக்கு 13 புலமைப்பரிசில்கள் மற்றும் வாசிப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை திரு. கோடோ ஹிடேகி அவர்களின் ஆதரவுடன் வழங்கிவைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது, ஜப்பான்-இலங்கை நட்புறவு சங்கத்தின் தூதுக்குழுவினரால் இந்த நன்கொடை விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் … Read more

ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. 46 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.   நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று(24.05.2023) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனை சமர்பித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் … Read more

முல்லைத்தீவு இராணுவம் பயன்படுத்திய காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை இராணுவத்தின் செயற்பாடு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் கொள்கைக்கு அமைவாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மொத்தம் 70.05 ஏக்கர் காணிகளை வியாழக்கிழமை (18) விடுவித்தது. 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் புதுக்குடியிருப்பு 68 வது காலாட் … Read more

மாலியில் இலங்கை அமைதி காக்கும் நான்கு படையினர் குண்டுவெடிப்பில் காயம்

மாலியில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலியில் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கை வீரர்கள், மினுஸ்மா (மாலி ஐ.நா பணி) மாலியில் ஞாயிற்றுக்கிழமை (21) குண்டு வெடித்ததில் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை அமைதி காக்கும் படையினர் கவச வாகனத்தில், வழங்கல் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்குகின்றமை குறிப்பிடதக்கதாகும். பழங்குடியினக் கலவரங்களால் சிதைந்த நிலப்பரப்பு நாடான மாலியின் கிடால் பகுதியில் உள்ள டெஸ்ஸாலிட்டில் அவர்களின் முகாமுக்கு வடமேற்கே சுமார் 15 கிமீ தொலைவில் வெடிப்பு ஏற்பட்டது. … Read more

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில்இ அம்மாவட்டத்தில் உள்ள 55 பட்டதாரிகளுக்குஇ மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால்இ நேற்று (23) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற் கட்டமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது உரையாற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான்… ‘நாட்டில் தற்போதைய பொருளாதார சிக்கல் காரணமாக போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்துள்ளது. அதற்கிணங்கஇ … Read more

LPL தொடர் ஏலத்துக்கு முன்னர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள்

இலங்கையில் 4ஆவது தடவையாக நடைபெறவுள்ள LPL தொடருக்கான ஏலத்துக்கு முன்னர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இவ் LPL போட்டியின் 4 ஆவது தொடர் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 20 வரை நடைபெறவுள்ளது. கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்: பாபர் அசம், மதீஷ பத்திரன. நசீம் ஷா, சாமிக்க கருணாரத்ன தம்புள்ள ஓரா: மெதிவ் வேட், குசல் மெண்டிஸ், லுங்கி என்கிடி, அவிஷ்க பெர்னாண்டோ ஜப்னா … Read more