கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2023 மே 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத் தாக்கல் செய்துள்ளதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (நிர்வாகம்) சேத்திய குணசேகர தெரிவித்தார். இந்த உரிமை கோரல் கோரிக்கை மனு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மே 15 ஆம் திகதி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் (பொதுவான பிரிவு) விசாரணைக்கு எடுத்துக் … Read more

தனிப்பட்ட திருமண வைபவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அதிசொகுசு கார்

பிரதமர் அலுவலகத்தின் சொகுசு காரை பழுது பார்ப்பதற்காக வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை திருமணத்திற்கு பயன்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கார் பழுது பார்க்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியின் கோரிக்கைக்கமைய, திருமண நிகழ்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனை கொண்டு சென்ற வாடகை வாகன சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 15 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 150000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறைத்தண்டனை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்தார் … Read more

அடுத்த வாரம் முதல் மருந்து வகைகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம் – சுகாதார அமைச்சர்

அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். டொலரின் பெறுமதி குறைவடைவதற்கு ஏற்ப இவ்வாறு மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மருந்து வகைகளின் விலைகளை குறைக்கக் கூடிய பெறுமானம் தொடர்பாக நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணக்காளர் பிரிவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பட்டார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு … Read more

மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 5 ராசியினர்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா…! – இன்றைய ராசிபலன்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN … Read more

கடந்த கால தவறுகளை திருத்தியமைக்க முடியும்

அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் – அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து … Read more

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! தீவிரமடையும் பொலிஸ் விசாரணைகள்

களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத்திணைக்களம் எதிர்வரும் நாட்களில் களுத்துறை சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை நீதவானின் விசேட அனுமதியுடன் இந்த வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த அவரது தோழி மற்றும் அவரது காதலன், பிரதான சந்தேகநபர், வாகன சாரதி ஆகியோரிடம் வாக்குமூலம் … Read more

நூற்றுக்கணக்கான படையினர் டெங்கு தடுப்பு நடவடிக்கையில்…

சுகாதாரத் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு தடுப்பு திட்டத்திற்கமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 141, 142 மற்றும் 144 வது காலாட் பிரிகேட்களின் நூற்றுக்கணக்கான படையினரால் மே 13 முதல் 15 வரை இராணுவத் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுடன் இணைந்து மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் பகுதிகள் மற்றும் வீட்டு வளாகங்களை ஆய்வு செய்தனர். இத் திட்டம் பிடகோட்டை, … Read more

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழப்பு – மனைவி வைத்தியசாலையில்

கொழும்பு – பேலியகொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தானது நேற்றைய தினம் (17.05.2023) பேலியகொடை – புளுகஹ சந்தியில் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த கணவன், மனைவியே விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  மேலதிக விசாரணை அவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மனைவி உயிரிழந்துள்ளதுடன், கணவன் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான … Read more

தற்போது பரவும் காய்ச்சலுக்காக பெரசிடமோல் அல்லாத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.!

தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார். இவர் நேற்று (17) சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தற்போது டெங்கு நோய் அதிகளவில் பரவி வருவதாகத் தெரிவித்த விசேட … Read more