களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த 16 வயதுடைய சிறுமி! வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான மேலும் பல தகவல்கள்

களுத்துறையில், மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் மூவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இன்று(15.05.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதியாக செயற்பட்டவர், சிறுமியின் நண்பி … Read more

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு (Photoa)

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று பங்காளதேஷின் டக்கா நகரில் நடைபெற்றுள்ளது. ‘இந்தியா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலின்போது இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள்  மேலும், இந்து சமுத்திரப் பிராந்திய விடயங்களில் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள் தொடர்பாகவும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் … Read more

இந்திய இழுவை வலைப் படகுகள் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு நட்டஈடு ஈடாகாது – கடற்றொழில் அமைச்சர்

இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதற்கு இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம்  (13) சிலாபத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு, குறித்த பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட … Read more

வடக்கு- கிழக்கு ஆளுநர்கள் உட்பட மூவர் மீது ஜனாதிபதி அதிரடி நவடிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15.05.2023) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) நியமிக்கப்படவுள்ளனர் .  ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள்   வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மேற்படி மூன்று ஆளுநர்களும் … Read more

புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல பல்கலைக்கழகக் கட்டமைப்பு தயார் செய்யப்படும்

10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்து அதில் முன்னணி வகியுங்கள் – கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023ஆம் … Read more

இரண்டு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனம் இரண்டு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, 400 கிராம் லங்கா சதொச, பால் மா ஒன்றின் புதிய விலை 1080.00 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 243.00 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி

ஜப்பான் தேசிய அணியுடனான நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை 4–0 என முன்னிலை பெற்றுள்ளது. சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது. இதன்பின்னர் பதிலுக்கு … Read more

மக்களின் ஆணையில் மட்டுமே மீண்டும் மகிந்த பதவிக்கு வருவார்! நாமல் சூளுரை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது புதல்வருமான நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். தலைமைப் பொறுப்பிலிருந்து விடை கொடுத்த போது மக்களுடன் இருந்த மகிந்த, மக்களின் ஆணையின் அடிப்படையில் மட்டுமே மீண்டும் பதவிக்கு வருவார் என நாமல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது அர்த்தமற்றது மகிந்த பிரதமராக பதவி ஏற்றுக்கொள்வார் இதனால் கலகம் ஏற்படும் என்ற அடிப்படையில் கொழும்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது அர்த்தமற்றது என தெரிவித்துள்ளார். … Read more

பல்துறை அபிவிருத்தி உதவியாளர்களுக்காக தென் மாகாண அரச சேவையின் கனிஷ்ட தரத்தில் நிரந்தர பதவி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பல்துறை அபிவிருத்தி உதவியாளர்கள் 740 பேருக்கு தென் மாகாண அரச சேவையில் கனிஷ்ட தரத்தில் நிரந்தர பதவிக்காக நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நேற்று (14) தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி. டபிள்யு. கமகே தலைமையில் தென் மாகாண பிரதான செயலக அலுவலகத்தின் கேட்போர் கூடம் மற்றும் மாகாண அலுவலக லபுதுவ ‘தக்ஷினபாய’ வில் இடம்பெற்றது. தென் மாகாண சபையில் இரண்டு வருடங்கள் பயிற்சிக் காலத்தை நிறைவு … Read more