இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு! 22 கரட் தங்கப் பவுணின் விலையில் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக  சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, இன்று(13) காலை ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக காணப்பட்டுள்ளது. தங்க விற்பனையாளர்களின் தகவல் நேற்று (12) 161,600 ரூபாவாக 22 கரட் தங்கப்பவுணின் விலை காணப்பட்டது. இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் … Read more

இலங்கையில் தீவிர கண்காணிப்பு வலையத்திற்கு கீழ் ஹோட்டல்கள்!

சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்குகின்ற விடுதிகள் மற்றும் உணவகங்களை தீவிரமாக கண்காணிக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் தலைமையகம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள்  கொழும்பு உட்பட அனைத்து மாகாணத்திலும் எந்த வயதுடைய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அறைகள் வழங்கப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதி உரிமையாளர்கள் அதிகமான பணத்தினை சம்பாதிக்கும் நோக்கிலேயே இவ்வாறு வயது குறைந்த சிறுமிகளுக்கும் … Read more

சீமெந்தின் விலை குறைப்பு

சீமெந்து விலை குறைக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதன்படி இன்று (13.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சீமெந்தின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை இதன்படி 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு மூட்டை சீமெந்து 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 2750 ரூபா என விற்பனை செய்யப்பட்ட சீமெந்து நாளை முதல் 2600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் … Read more

ஒரு தலைக் காதலால் கொல்லப்பட்ட இளம் குடும்பப் பெண்: தீவிர நடவடிக்கையில் பொலிஸார் (photos)

வவுனியா – நீலியாமோட்டைப் பகுதியில் இளம் குடும்ப பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று (13.05.2023) பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நியூட்டன் தர்சினி (வயது 26) என்ற ஒருபிள்ளையின் தாயும், சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) என்ற இளைஞனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடியன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் வீடு திரும்பிய போது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக … Read more

மாணவியை காணவில்லை – காதலனை தேடும் பொலிஸார்

பெந்தோட்டை, சிங்கரூபாகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் இளைஞருடன் தனது மகள் காதல் உறவில் இருந்ததாகவும் தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கடந்த 10ஆம் திகதி இது குறித்து மகளை எச்சரித்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி 2 நாட்களாக … Read more

சீனி மற்றும் கோதுமை மா விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் மாதத்திற்குள் சீனியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.   சீனி விலை இறக்குமதியாளர்களிடம் காணப்படும் சீனி கையிருப்பு தொடர்பில் ஆராயுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை இறக்குமதியாளர்கள் ஏற்றுக்கொண்டதற்கமைய, அடுத்த … Read more

பால் மா விலை குறைப்பு குறித்து வெளியான புதிய தகவல்

பால் மா விலை குறைப்பு குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உறுதியான முடிவு இல்லை இது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்கள் மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை (15.05.2023) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  Source … Read more

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறை நவீனமயப்படுத்தப்படும்

சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்கு செலவிட்டிருந்தால் ஆசியாவின் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் – “skills Expo 2023” நிகழ்வில் ஜனாதிபதி உரை. அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த பத்து வருடங்களில் சில அரச … Read more

தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் நாட்டில் தாதிச் சேவையில் பெரும் எதிர்கால புரட்சியொன்றுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது..

தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் நாட்டில் தாதிச் சேவையில் பெரும் எதிர்கால புரட்சியொன்றுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் நேற்று (12.05.2023) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- இன்று சர்வதேச தாதியர் தினம். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவை … Read more

அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது- மாகாண பணிப்பாளர்

அரசினால் இலவசமாக வழங்கப்படும் தொழில்சார் கற்கைநெறிகளில் முயற்சியாளர்கள் கலந்துக்கொள்ளாத நிலை காணப்படுவதாக மாகான தொழிற்றுறை திணைக்கள பணிப்பாளர் எஸ்.வனஜா தெரிவித்தார். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண கைத்தொழிற்றுறை மேம்பாட்டுக்கான கொள்கைத்திட்ட வகுப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் தும்பு தொழிற்சாலை தொடர்பான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் கற்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. இந்த பயிற்சிநெறி இலவசமாக வழங்கப்படுவதுடன் நாளுக்கு 200ரூபாய் … Read more