சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வாக்கெடுப்பை பகிஷ்கரிக்கும் கூட்டமைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு  நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(28.04.2023)  நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் மூன்றாவது நாளாக இன்று காலை ஆராம்பமாகியது. இந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக பங்குபற்றாக சூழ்நிலை இருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அழுத்தம் இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினாரால் வாக்களிக்க … Read more

வடகடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 10 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் குதிரிப்பு, வெத்தலக்கேணி மற்றும் நாகர்கோவில் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர், சுழியோடி உபகரனங்கள், சுமார் 1040 கடல் அட்டைகள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தை மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இன்று பிற்பகல் 04.00 மணி முதல் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மோசமான காலநிலை நிலவியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது. இன்று பிற்பகல் 04.10 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த Fitz Air விமானம் 8D 834 … Read more

இலங்கையில் பிரான்ஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. Jean – Francois PACTET அவர்கள் உள்ளிட்ட குழுவொன்று 2023 ஏப்ரல் 24 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதுடன், குறித்த தூதரகத்தின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கும் 2023 ஏப்ரல் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பங்களிப்புடன் 2023 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் 28 வரை கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தில் … Read more

புலம்பெயர் அமைப்புக்களிடம் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவுமாறு அனைவரும் ஒன்றிணைந்து புலம்பெயர் அமைப்புகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ். வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் வறிய குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வீதம் உதவி … Read more

'மலையகம் – 200' என்ற தொனிப்பொருளில் முத்திரை வெளியிட மக்களிடம் இருந்து மாதிரி

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எவை என்பன குறித்து … Read more

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரக பேச்சாளார் விளக்கம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்காவினால் தடைவிதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதில் வழங்கியுள்ளது. இது தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் ஒன்று எழுப்பிய இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளார் ஒருவர் கொழும்பில் அமைந்துள்ள தூதரகம், மற்றும் வெளிவிவகார திணைக்களம் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இவ்வாறான விடயங்களை மீளாய்வு செய்து வருகின்றது.  அத்துடன் உலகளவில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல் செயற்பாடு  என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு இணைப்பு இலங்கையின் … Read more

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாட கிடைத்தது என்னை அடையாளப்படுததிக்கொள்ள கிடைத்த சிறந்த சந்தர்ப்பம்

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடியதே என்னை சிறந்த துடுப்பாட்ட வீரராக அடையாளப்படுத்த மிகவும் பொருத்தமான இடத்தைக் கொடுத்ததாக புதுமுக வீரர் நிஷான் மதுஷ்க தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இரட்டை சதத்தை பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘என்னுடைய மூன்றாவது போட்டியிலேயே இரட்டை சதம் பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முன்பிருந்தே நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்ட ம் செய்து கொண்டிருந்தேன். … Read more

சிலரின் போதையூட்டக்கூடிய கருத்துக்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

பெரும்போக அறுவடையின் போது அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்கி வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, வேலனை பிரதேச செயலகத்தில் இன்று (28.04.2023) இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருமானம் குறைந்த மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 இலட்சம் குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி பொதி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார். கிளிநொச்சி விவசாயிகளை … Read more

அரச ஊழியர்களுக்கு அனுமதி வழங்கும் சுற்றறிக்கை! நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்கள் தொடர்பிலான சுற்றறிக்கையொன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (28.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும். வழங்கப்படும் சந்தர்ப்பம் அத்துடன் தொலைதூர பிரதேசங்களில் இருந்து அரச நிறுவனங்களுக்கு … Read more