புலம்பெயர் அமைப்புக்களிடம் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை (Photos)

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் நிர்வாக முடக்கலுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி முழு ஆதரவினை வழங்க வேண்டும் என பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் இன்று(23.04.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, புலம்பெயர் அமைப்புக்கள்  ‘‘பிரித்தானிய இந்துக் கோவில்கள் சங்கங்கள் ஆகிய நாம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் … Read more

10 இலட்சம் முட்டைகளின் விநியோகம் குறித்து வெளியான தகவல்!

கடந்த 19ஆம் திகதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் விநியோகம் குறித்து அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி முட்டைகளின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர் கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டைகள் நாளைய தினம் (24.04.2023) பரிசோதிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. முட்டைகள் தொடர்பான அறிக்கை இதேவேளை, கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்த முட்டைகள் தொடர்பான அறிக்கை நாளைய தினம் (24.04.2023) … Read more

ஒரேயொரு ராசிக்காரருக்கு கோடான கோடி அதிஷ்டம்! கும்பத்தை ஆட்டிப்படைக்கும் கிரக பெயர்ச்சி- இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரக பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இன்றைய தினம் உயர்ச்சி பெற போகும் ராசிக்காரர்கள் யார் … Read more

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம்

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம்(24.04.2023) விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மற்றும் வாக்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.    ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட சந்திப்பு இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் … Read more

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் கொண்டுவரப்படும் மாற்றம்

கொழும்பு தாமரை  கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல இந்த நிலையில், தாமரை  கோபுரம் என்ற பெயரில் தாமரை என்றப் பெயரை நீக்கி  கொழும்பு கோபுரம் என மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.  உயரமான கோபுரத்திற்கு தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல என்பதே பெயரை மாற்றக் காரணம் என கூறப்படுகின்றது. Source link

பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் மே மாதம் 15 ஆம் திதிக்குள் விநியோகிக்கப்படும்

மே மாதம் 15ஆம் திகதிக்குள் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை 80ம% பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், தற்போது 85% சீருடைகள் விநியேகிக்கப்பட்டுள்ள அதேவேளை, மீதமுள்ள சீருடைகளை மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கடுமையான வெப்பத்துடனான காலநிலை நீடித்து வருவதனால் நீரிற்கான தேவை வெகுவாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய செய்கைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என சபையின் பொது முகாமையாளர் வசந்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். நீர் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் உயரமான இடங்களுக்கு … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

தொடருந்தில் செல்பி எடுக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட தொடருந்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை தொடருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று … Read more

போலியாக ஜனாதிபதி ஆலோசகரின் கையொப்பத்தையிட்ட பொலிஸ் பரிசோதகர் கைது

பொலன்னறுவை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் அரச பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தை போலியாக கையெழுத்திட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு போலி ஆவணம் ஒன்றை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவையை சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த … Read more