சாரா என்னும் புலஸ்தினி மரணம்!வெளியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் (சாரா ஜஸ்மின்) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் உள்ள பாதுகாப்பான இல்லத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக மரபணு பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மரபணு பரிசோதனை உயிரிழந்த 15 பேரின் மாதிரிகளை … Read more

ஜனாதிபதி ரணிலின் பணிப்புரைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆலோசனைக்கு அமைய அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் அமைச்சு இந்த சூத்திரத்தை நடைமுறைப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சூத்திரம் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனத்தால் (CPC) பெற்ற இலாபம் அல்லது நட்டத்துடன், எரிபொருளின் மீது விதிக்கப்படும் உண்மையான வரித் தொகை மற்றும் விலையை அதிகரிப்பது அல்லது … Read more

வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள அனுமதி! கிடைக்கும் பெருமளவு பணம்

தற்போது மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.   ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இலங்கைக்கு பெருமளவு பணம் வந்துள்ளது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  நாங்கள் ஏற்கனவே இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுமார் 64 வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரப்படுகிறது. அடுத்த … Read more

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்- சாகல ரத்நாயக்க

நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் வங்கி மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நிர்மாணத் துறையினர் எதிர்நோக்கும் நிதிச் சிக்கல்கள் மற்றும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய … Read more

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

நாட்டில் பாவனைக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இன்று (29) காலை 6 மணிக்கு கொலன்னாவ மற்றும் மிதுராஜவெல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய ஒபரேட்டர்கள் (Operators) தமக்கு தேவையான குறைந்தபட்ச இருப்புகளைப் சரியான வகையில் பராமரிக்குமாறும் மற்றும் அதற்கேற்ப தேவையான ஓர்டர்களை … Read more

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிவாரண விலையில் தேவையான அனைத்து உரங்களையும் வழங்க நடவடிக்கை … Read more

எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலி! முச்சக்கரவண்டி கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்

எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலியாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். அதன்படி முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் குறையும் கட்டணம் எனவே இன்று முதல் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் என கட்டணம் அறவிடப்படவுள்ளது. இதற்கு முன்னதாக முச்சக்கரவண்டி … Read more

ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 04 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் தொடரின் போட்டியில் இலங்கை அணியினை ஆப்கானிஸ்தான் அணி 04 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியானது, அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கமைய அபுதாபியின் டோலரன்ஸ் அரங்கில் நேற்று (28) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் … Read more

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய பஸ் கட்டணங்களும் குறைக்கப்பட உள்ளன

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 80 ரூபாவால் குறைவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைவடைய உள்ளதுடன், புதிய பஸ் கட்டணம் நாளை (30) முதல் அமல்படுத்தப்படும். மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் ஏனைய பஸ் கட்டணங்கள் … Read more

பேருந்து கட்டணங்கள் சடுதியாக குறைப்பு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம்  30 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் பிற கட்டண திருத்தம் தொடர்பில்  நாளை அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் விலை குறைப்பு அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  Source … Read more