ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21.03.2023) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இடமாற்றம் தொடர்பான விபரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றின் ஊடாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதேவேளை … Read more

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்

அசத்தப்போவது யாரு புகழ் கோவை குணா உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார். கோவை குணா கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர். பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இவர் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களை சிரிக்க … Read more

புலஸ்தினி நாட்டை விட்டு வெளியேற உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி விடுதலை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று (20) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் என்பவர் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான தகவலைத் தெரிந்தும் அதனை மறைத்தமை தொடர்பிலும் அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த … Read more

திடீர் அதிஷ்டம் தேடிவரும் மிதுன ராசியினர்! அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன் (video)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும். கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நாளைய தினம் கிரகங்களின் சேர்க்கையால் அதிஷ்டங்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம், உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது … Read more

இலங்கை அமைச்சர் குழுவொன்று இன்று தென்னாபிரிக்கா பயணம்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று இன்று காலை தென்னாபிரிக்கா சென்றுள்ளது. இலங்கை அரசாங்கம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின்’ பணியை முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான அனுபவத்தைப் பெறுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு முன்னதாக, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ. ஷால்க், தென்னாபிரிக்காவிற்கு சென்று தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட உண்மை … Read more

உங்களுக்கு இவ்விடங்களில் மச்சம் இருக்கின்றதா? அப்போ உங்களுக்கு அதிஷ்டம் தான்!!

மனிதர்களின் உடலில் எந்த பாகத்தில் மச்சம் உள்ளதோ அவர்களுக்கு அதிஷ்டம் உண்டு என்பார்கள். பலருக்கு பல இடத்தில் மச்சம் இருக்கும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறிதளவாக காணப்படும். ஆனால் வளர வளர அதுவும் வளர்ந்து விடும். இதனால் பல நன்மைகள் ஏற்படும். அவை எவை என பார்ப்போம்,   நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் இருப்பார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.  நெற்றியில் வலது பக்கம் இருந்தால் வறுமை இருந்தாலும் நேர்மையுடன் … Read more

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்: அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அதிரடியான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், அறிவிப்புகள் சிலவும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான கடனுதவிக்கு நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் பல மறுசீரமைப்புத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். Source link

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல!

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் … Read more

ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களாயின், அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும் – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே … Read more

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி பெயர்களிலும் ஆலயங்களில் மட்டுமே உள்ளது! கல்லாறு சதீஸ் (Video)

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி பெயர்களிலும், ஆலயங்களில் மட்டுமே உள்ளது என கல்லாறு சதீஸ் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறி ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் உள்ள இரண்டாம் தலைமுறையினர் தமிழ் மொழியை கற்று வருகின்றனர். ஆனால் தமிழ்மொழி மூன்றாம்,நான்காம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுமா என்பது மிகவும் கேள்விகுறியான ஒன்றெனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை எமது … Read more