கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐயோரா பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கை முன்னெடுப்பு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் இலங்கையின் தலைமையில் 2023 மார்ச் 20ஆந் திகதி 23 ஐயோரா உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. ஐயோரா செயலகத்தின் பொதுச்செயலாளர் சல்மான் அல் ஃபரிசி மற்றும் செயலகத்தின் பிரதிநிதிகள் மொரிஷியஸில் உள்ள ஐயோரா செயலகத்தில் இருந்து இணையவழி மெய்நிகர் முறையில் பங்கேற்றனர். கூட்டத்தை ஆரம்பித்து வைத்த வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் … Read more

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பண்டாரவளை, பூனாகல, கம்பரகலை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (19) மாலை கம்பரகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வசிக்கும் 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை … Read more

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களை காணவில்லை

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற  நான்கு இளைஞர்கள்  காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  எல்லேவல நீர்வீழ்ச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 10 பேர் கொண்ட குழு அங்கு நீராடச்சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போன இளைஞர்கள் காணாமல் போன இளைஞர்கள் காத்தான்குடி மற்றும் அக்கரப்பற்று பிரதேசங்களை  பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர் குளிப்பதற்கு அனுமதியில்லை என பலகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸார் … Read more

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள நிதி! உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அமைச்சர், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.  எனது தனிப்பட்ட கருத்து  அரசியலமைப்பின் பிரகாரம் பணத்தின் … Read more

இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டு தாவரம்

மத்திய மலைநாட்டின் உலர் வலயங்களில் பரவிவரும் தாவர வகை பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பேராதனை தாவரவியல் பூங்காவின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி அச்சலா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உரித்தற்ற வெளிநாடொன்றிலிருந்து எடுத்து வரப்பட்ட இந்தத் தாவர இனத்தை ஹட்டன், பதுளை, பண்டாரவளை போன்ற பகுதிகளில் அவதானிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதுபற்றி விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கலாநிதி அச்சலா ரட்நாயக்க மேலும் தெரிவித்தார். Source link

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி!ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்குதாரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். அனைத்து நிதி நிறுவனங்கள் மற்றும் கடனாளிகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடுமையான நிதி முகாமைத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி இலங்கைக்கான விரிவான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சற்றுமுன்னர் … Read more

பேரதிஷ்டத்தை அடையவுள்ள இரு ராசிக்காரர்கள்! அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன்

பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றத்தின் படி கணிக்கப்படும். இவ்வாறு கணிக்கப்படும் ராசிக்கான பலன்களினால் ஒரு நபரின் எதிர்காலம் எவ்வாறு இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் பிரச்சினைகளின்றி சுபம் நிறைந்த வாழ்க்கை வாழவும் இந்த ராசிக்கான பலன்கள் வழிவகுக்கிறது. சிலருக்கு ராசிப்பலன் அன்றைய நாளை மங்களகரமாக ஆரம்பிக்க இறைவன் கூறும் தெய்வ வாக்கு எனவும் கருதப்படுகிறது. எனவே மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை காணலாம். உங்களது … Read more

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு! எரிபொருள் விலை குறையலாம்

டொலரின் மதிப்பு 200 ரூபா அல்லது 300 என்ற நிலையான மாற்று விகிதத்தில் இருக்கும் என கூற முடியாது. கடனை செலுத்த ஆரம்பித்தால், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இறக்குமதியை அனுமதித்தால், டொலர் மதிப்பு மீண்டும் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  கட்டணங்கள் குறைக்கப்படலாம் இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை  ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கப்படலாம். … Read more

ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிந்ததன் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும்போது இன்றையதினம் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. எனினும், கடந்த  வார ஆரம்பத்தில் இருந்து தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் அதன்படி இன்றைய தினம் இலங்கையில் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் வருமாறு, தங்க அவுன்ஸ்              … Read more

டொலர் தொடர்பிலான நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

நாட்டின் அத்தியாவசிய துறைகளுக்குத் தேவையான வெளிநாட்டு நாணயம் கையிருப்பில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வார காலப் பகுதியில் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு அமைவாக சில மாற்றங்களை எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் அமெரிக்க டொலர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சிலர் குற்றஞ்சாட்ட முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் டொலர் தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இவ்வாரம் மிகவும் முக்கியமானதாக அமையும். சர்வதேச நாணய நிதியம் … Read more