தொழிற்சங்கங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகின்றன..

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டினார். தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிற்சங்கங்களின் தேவையற்ற வேலைநிறுத்தம் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தடைபடலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா, சீதுவ, கிழக்கு மூகலங்கமுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை இன்று (19) மக்களிடம் கையளிக்கும் … Read more

யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர்

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது. யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி, யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதியவர் மரணம் இந்நிலையில் பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதியவரும் … Read more

ஜனாதிபதி தலைமையில் “சதராவ தீபனீ” கௌரவிப்பு நிகழ்வு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தியலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட “சதராவ தீபனீ” என்ற கௌரவிப்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (16) நடைபெற்றது. கலைப் படைப்புகளுக்குப் பங்களித்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியெல்ல, சிரில் விக்கிரமகே ஆகிய சிரேஷ்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.   பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, குமார … Read more

தொடர் தோல்வியின் பின்னர், வெற்றி பெற்ற றோயல் கிரிக்கெட் அணியை போன்று இலங்கையையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வருவோம்! – ஜனாதிபதி

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே … Read more

பதுளையில் கோர விபத்து! ஆசிரியர் ஒருவர் மரணம்(Photos)

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20.03.2023) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. சிகிச்சை பலனின்றி மரணம் பதுளை- செங்கலடி வீதியின், பசறை … Read more

“நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா (18.03.2023) கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் … Read more

இலங்கையில் சிலபிரதேசங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு

இலங்கையில் சிலபிரதேசங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. திருகோணமலை -கோமரங்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பிரதேசங்களில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசியகட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது இரண்டு தசம் ஆறு றிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.கோமரங்கடவல பிரதேசத்தில் நேற்று அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது 3 றிக்டராக  பதிவாகியுள்ளதாக தேசியகட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

‘விழித்திரு பெண்ணே’ : உலகளாவிய பெண் ஆளுமைகளின் விருது விழா -2023

பெண் தன் ஆளுமைகளைக் கூர்மைப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதையும் அதனை நிலைக்கச் செய்வதனையும் அது சம்பந்தமாக உலகம் பேச வைப்பதும் முதலாவது பெண்சார்ந்த செயற்பாடாகக் கருத்தில் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பெண் ஆளுமைகளைக் கௌரவிக்கப்படவேண்டும் என்ற நோக்குடன் வீறு நடைபோட்டு எழுந்துள்ளது கனடா ‘விழித்திரு பெண்ணே’ சர்வதேச மகளிர் அமைப்பு. அந்தவகையில், கனடா ‘விழித்திரு பெண்ணே’ சர்வதேச மகளிர் அமைப்பு பெருமையுடன் வழங்கும் உலகளாவிய பெண் ஆளுமைகளின் விருது விழா -2023 நாளை 21ஆம் திகதி மாலை 5.30 மணிக்குக் கொழும்பு … Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி உடுகம்பலையில் தமது வீடு எரிந்து நாசமானது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்த முறைப்பாட்டின் விசாரணை தாமதம் ஆனமை குறித்து கவலை தெரிவித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 16ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், வீடு எரிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு … Read more

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதற்கமைவாக அவற்றின் அதிகாரம் இன்றில் இருந்து ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ்.கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்கள் இன்று (20) முதல் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று … Read more