வருடாந்தம் ஆயிரக்கணக்கில் காச நோயாளிகள்: மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காசநோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாதுவிட்டால் மரணம் கூட நேரிடும் என்றும் சுவாச நோய் தொடர்பான நிபுணர் டாக்டர் போதிக சமரசேகர கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற காசநோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த மருத்துவர் சமரசேகர, நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் காசநோய் காற்றினால் பரவும் நோய் என்பதால் … Read more

இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

இலங்கையில் தங்கப் பவுணொன்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமையளவில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140000 என்ற பெறுமதிக்கு குறைந்திருந்தது. மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் … Read more

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே விசாரிக்கப்படவுள்ளது.  அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரச திணைக்களங்கள் பலவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்வதற்கு உச்ச நீதிமன்றம் … Read more

ஆசிரியர் இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்படும் இடமாற்றங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிலைமையின் அடிப்படையில் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான ஆலோசனைகள் மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுக்கு  கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மானிய அரிசி விநியோகம்..

அரசாங்கத்தால் நெல் கொள்வனவு மற்றும் கையிருப்பில் உள்ள 2022/2023 காலப் பகுதியில் பெரும்போக அறுவடையினால் கிடைத்த அரிசியை ,அகற்றல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அரச மானிய அரிசி விநியோகம் அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது. இதன் முதற் கட்டமாக காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் (167A,167B,167C), ஒரு பிரிவிற்கு 500அரிசிப் பொதிகள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்து கிலோ வீதம், வழங்கப்பட்டன. இதற்காக பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட … Read more

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனினும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

இரண்டு மில்லியன் கன மீட்டர் கடல் மணல் அள்ளப்படும்

இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார். முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரை 10-15 கிலோமீற்றர் தூரத்தில் கடலில் இருந்து  கடல் மணல் அள்ளப்படும். … Read more

கல்மடுக்குள நன்னீர் மீன்பிடி:கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை

கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவிகள் மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கல்மடுக்குளத்தில் வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துவரும் 75 அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக நேற்றையதினம் (15) கடற்றொழில் அமைச்சருடன் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனால் … Read more

சேற்று உரம் (TSP) ஏற்றிய MV INCE PACIFIC  கப்பல்

3 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் முதன்முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு நெற்செய்கைக்குத் தேவையான சேற்று உரம் (TSP) ஏற்றிய MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பலில் 36,000 மெட்ரிக் டொன் TSP உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதேபோன்ற மேலுமொரு சேற்று  உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது. ஐ நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த சேற்று … Read more

உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன

உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டனகைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (15) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் … Read more