பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம்(16.03.2023) வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த ஒருநாள் வேலைநிறுத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் கூறுகையில்,அரசாங்கத்தின் வரிக் கொள்கையை எதிர்த்து ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆசிரியர் தொழிற்சங்கமும் நேற்று(15.03.2023) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது. இதனால் பாடசாலைக் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று … Read more

சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்குத் தோற்றுவதில்..

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயல்பட்டுவருவதாகவும், சட்டக்கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தயார்…

கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு புகையிரதத் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது. கொழும்பு – மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த புகையிரதச் … Read more

கனடாவுக்கான இலங்கை பிரதிநிதியாக ஆனந்தம் இரத்தினகுமார் நியமனம்!

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடாவுக்கான இலங்கை பிரதிநிதியாகக் கனடாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் நேற்றைய தினம் (15.03.2023) மேற்படி விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும். எஸ். அமுனுகம வழங்கி வைத்துள்ளார். மேற்படி விசேட நியமனத்தைப்பெற்ற கனேடிய வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார், தனது நியமனத்தினூடாக தான் செயலப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக … Read more

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை 17ஆம் திகதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஏஞ்சலோ மெத்தியூஸ் ஐஊஊ டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் முன்னேறியுள்ளார். தற்போது இவர் தரவரிசையில் 17வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.குசல் மெண்டிஸ் தரவரிசைப் பட்டியலில் 02 … Read more

இடி மின்னல் குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச்16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமாக வளிமண்டல நிலை உருவாகி வருகிறது. மேல், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் … Read more

ATM அட்டையை திருடி பாரிய கொள்ளையில் ஈடுபட்ட பெண்

பட்டபொல பிரதேசத்தில் ATM அட்டையை திருடி 660,000 ரூபாய் கொள்ளையடித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டபொல பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாடு செய்தவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனவும் அவர் தனது தாய்க்கு அனுப்பிய பணத்தை பெற பயன்படுத்திய ATM அட்டையை சந்தேகநபர் திருடியுள்ளதாக மேலதிக … Read more

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன்னினால் ஜனாதிபதி முன்னிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் டிரான் அலஸிடம் கையளிக்கப்பட்டது.பின்னர் ஜனாதிபதியும் நன்கொடைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் … Read more

தொழிற்சங்கப் போராட்டத்தினால் நான்கு பில்லியன் ரூபா நட்டம்!

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகம், ரயில்வே, தபால், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாட்டுக்கு நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக நாள் ஒன்றில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 10 பில்லியன் ரூபா எனத் தெரிவித்துள்ளார். பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை துல்லியமாக மதிப்பீடு செய்ய … Read more

ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிப்பு

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை வங்கியின் முழுமையான … Read more