யாழில் போக்குவரத்து சேவை வழமை போன்று

தொழிற்சங்கங்களினால் இன்று (15) வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் யாழ் மாவட்டத்தில் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் வழமை போல் நடைபெறுவதாக எமது யாழ் ஊடக அதிகாரி தெரிவித்தார் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதேவேளை அரச தினணக்களங்களிலும் ஊழியர்களின் வருகை ஒப்பீட்டளவில் வழமையை விட சற்று குறைவாக உள்ளமையை அவதானிக்கமுடிந்துள்ளது. Logini Sakayaraja

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2023 பெப்புருவரி

தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், பெப்புருவரியில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 42.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை எடுத்துக்காட்டியது. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றுகையினால் இப்பின்னடைவு தூண்டப்பட்டிருந்தது முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230314_sl_pmi_2023_february_t.pdf 

பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் மேலதிக பஸ்கள்

பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரெயிவே துறையில் சில பணிப்பகீஷ்கரிப்பு இடம்பெறவுள்ளதால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை ,இலங்கை போக்குவரத்து சபையும் பொது மக்களின் நலன்கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை … Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைகிறது (Video)

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றபோதும் இதன் மூலமான நன்மைகள் நுகர்வோரான மக்களுக்கு கிடைக்குமென தெரிவித்த அவர், இறக்குமதியாளர்களுக்கான பாதிப்பு பின்னர் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெரிவித்த அவர், நாட்டில் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளன. அவற்றை மேலும் குறைப்பதற்கு எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை  எடுக்க முடியும். அத்தியாவசிய உணவுப் … Read more

ஊவா மாகாணத்திலும் அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச்15ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டைமாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிலஇடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய … Read more

ரெயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்து – விளக்கம் கோரவிருப்பதாகவும் அறிவிப்பு

  ரெயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ரெயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். ரெயில் சேவை அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சேவைக்கு சமூகமளிக்காத அனைவரிடமும் அது பற்றி விளக்கம் கோரவிருப்பதாகவும் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு

 வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். மகடகஸ்கரில் வைத்து நதுன் சின்தக்க எனப்படும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்சிக்க எனப்படும் குடு சலிந்து ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அதிகாலை இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் மடகஸ்கருக்கு சென்றிருந்தனர். ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவுடன் மேலும் ஆறு பேரையும் … Read more

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க மாட்டோம் – போக்குவரத்து நிறுவனங்கள்

தனியார் பஸ்களும் இன்று (15) வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். இதேபோன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களும் இன்று வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இன்று வழமைபோன்று சேவையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று ரெயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு ரெயில்வே … Read more

ஐக்கிய இராச்சியத்தில் ஒலித்த சிங்கள பாடல்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய தினத்திற்கான 2023 ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட சேவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்கள பாடலை பாடியுள்ளனர். ரோஷனி அபே மற்றும் நுவான் பெரேரா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கலைஞர்கள் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இந்த இரண்டு கலைஞர்களும், பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளைக் குறிக்கும் வகையிலும், இந்த ஆண்டு பெப்ரவரியில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கௌரவிக்கும் … Read more

இலங்கை தங்க நகை வியாபாரிகளுக்கு விழுந்த மிகப்பெரிய அடி! கோடிக்கணக்கில் ஏற்பட்டுள்ள இழப்பு (video)

டொலர் வீழ்ச்சி என்பது ஒரு சிறு அரசியல் விளையாட்டாகக் கூட இருக்கலாம் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களாக சடுதியாக அதிகரித்திருந்தது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்தது.  இந்தநிலையில், டொலரின் வீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டொலரின் வீழ்ச்சி, ரூபாவின் உயர்வு, பொருளாதார நிலையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் நன்மை போன்றவை குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். லோ இதன்படி, விலைவாசி … Read more