புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய புகையிரத சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதன்படி நாளை (15.3.2023) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி காலை 5.00 மற்றும் 5.45 மணிக்கும், சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 4.50 மற்றும் 5.50 மணிக்கு இரண்டு புகையிரத சேவைகளும் இயக்கப்படவுள்ளன. ரம்புக்கனையில் இருந்து காலை 5.25 மற்றும் 5.57 மணிக்கும், கனேவத்தையில் இருந்து அதிகாலை 3.55 … Read more

இலங்கையின் கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கறுப்புச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக அமெரிக்க டொலர் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட தொகை 270 ரூபாவாக இருந்ததாக பரிமாற்ற தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார். புறக்கோட்டை, வெள்ளவத்தை, காலி, பெந்தோட்டை மற்றும் பேருவளை ஆகிய கறுப்புச் சந்தைகளில் இதே விலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக நாளாந்த அடிப்படையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இன்றையதினம் டொலரின் பெறுமதியில் சற்று … Read more

வேலை நிறுத்தம் குறித்து ,அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

அத்தியவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கடமை புரியும் அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த வாரமும் நாடு முழுவதும் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் என்று கூறப்பட்டது. பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாது, வைத்தியசாலைகளும் செயற்படாது, … Read more

அரச பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு, இணத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை 2023.03.25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மாகாணசபைகளின் … Read more

சாதாரண தரப் பரீட்சையை ,ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர், நாட்டின் வரலாற்றில் மாணவர்களின்; எதிர்கால கல்விக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆசிரியர்கள் செயற்பட்டதில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில அரசியல் தேவைகளுக்கு ஏற்ப … Read more

போதை மாத்திரைகளுடன் சிக்கிய சிவில் இன்ஜினியர்

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் இன்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இந்த போதை மாத்திரையை பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இலக்கு வைத்து இந்த போதை மாத்திரை ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி … Read more

IMF கடனுதவி இலங்கைக்கு எப்போது கிடைக்கும்… அரசு வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடனின் முதலாம் தவணை கிடைக்கும் திகதி வெளியானது.  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொகையின் முதல் தவணை இந்த மாதம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் மாதம் 20 ஆம் திகதி இந்த கடன் பெற்றுக்கொள்ளப்படும் என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் … Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்

தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  27.02.2023 திகதியிட்ட 2321/07 இலக்கம் கொண்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதியினால் இலங்கை தொடருந்து  சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத் தப்பட்டது. மன்னிப்பு கோரி கடிதம் நாளை (15) பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளும் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடருந்து  பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   Source link