வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்! வேலையும் பறிபோகும் – கடும் எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளது அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும், அந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்தப்படும் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்கும் நோக்கில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். வரிசை முறைமை பொருட்களை கொள்வனவு செய்ய நாட்டில் நிலவி வந்த வரிசை முறைமையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மேலும் நிவாரணங்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதனை தடுக்கவே இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ம் திகதி அரசாங்கம், … Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்க மறுத்தார் டிரான்!

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், ஏற்க மறுத்துள்ளார். முன்னதாக, மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸார்  மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு அதன்படி, … Read more

மகிந்தானந்தவிடம் மன்னிப்பு கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்! வெளியான அறிக்கை

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த 10ஆம் திகதி இரவு வெளிநாடொன்றுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பிலே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் இருவரும் பணி இடைநீக்கம் அறிக்கையை வெளியிட்ட அந்த திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், பெறப்பட்ட தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் வேறொரு நபருடையது எனவும், நாடாளுமன்ற … Read more

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த தினத்தில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.  … Read more

கடற்கரையைப் தூய்மைப்படுத்தும் திட்டம் மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. கடற்கரையோரத்தில் உள்ள குப்பைகளை இயந்திரம் மூலம் அகற்றும் இந்தத் திட்டம் கொழும்பு மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது. கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் … Read more

எரிபொருள் நிலையங்கள் மூடப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்

பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது. எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என … Read more

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்: ஆராய இந்திய தூதுக்குழு

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய தூதுக்குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. தங்க நகை ஆபரண சம்மேளனத்தின் தலைவர் சுலானி தலைமையிலான தூதுக்குழுவினரே எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து; ஆராயுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள், மின் உபரகணங்கள், மோட்டார் வாகனம், மற்றும் உணவு பதப்படுத்தல் உட்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளக் கூடிய முதலீடுகள் … Read more

மலையக சிறுவர் பராமரிப்பு நிலையங்களில், இலவச சத்துணவு

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூண்டுலோயா பேர்லன்ஸ் தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் சமீபத்தில்(01) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி குறித்து, நிதி இராஜாங்க அமைச்சர்..

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நான்கு வருடங்களில்,03 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயத்தின் நிதி குறித்து சில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில், நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.. ரூவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஏனை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு இந்த நிறுவனம் வழங்கும் தரச்சான்றிதழ் மிக … Read more