இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடயிலான ,முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும். 285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி நேற்றைய (12) ஆட்டநேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களை பெற்றிருந்தது. இரண்டாம் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றது. அணியின் சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 115 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதன்மூலம் … Read more

இலங்கையில் யில் அதிகரிப்பு

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

வாகன ஓட்டுநர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வின் நன்மை எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது நுகர்வோருக்கு வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி விலை திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எரிபொருளின் விலையில் நிச்சயமாக ஓரளவு குறையும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளமையினால் கிடைத்த நன்மை இலங்கையிலுள்ள எரிபொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுமா என வினவப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு … Read more

நிதியமைச்சருக்கு தேர்தல் ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பணத்தை விடுவிக்குமாறு நிதியமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை இன்றைய தினம் (13.03.2023) நிதியமைச்சர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை கொடுப்பது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். … Read more

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலர் வீழ்ச்சியுடன், எரிபொருள் இறக்குமதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை குறையும் விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக … Read more

விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்தது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி  அதிகரிப்பின் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்துள்ளது.  சுமார் ஐந்து வீதமாக விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரிவடைந்த டொலரின் மதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   Source … Read more

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு இளம் பெண்ணின் மரணம்

கண்டியில் நேற்று(11.03.2023) சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அலவத்துகொட பகுதியை சேர்ந்த 26 வயதான தனுக வதுவந்தி என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலுள்ள வயல்வெளியில் புதைந்திருந்த நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர். குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் உயிரிழந்தவரின் தாய்க்கு கணவன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டது. பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் … Read more

இலங்கையில் அதிகரித்துள்ள விவாகரத்துக்கள்

பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 8431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்களின் வருமான பதிவுகளை அழைக்காமலேயே சட்ட உதவி வழங்கப்படுகிறது. சனத்தொகையை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான பராமரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிப் … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்! வெளியான காரணம்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக இரவு நேற்று (10.3..2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மத்துகம நீதிமன்றில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகிந்தானந்த அளுத்கமகே தனது வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்துள்ளார். வெளிநாட்டு பயணத்தடை எனினும், தமக்கு எதிராக மத்துகம நீதிமன்றத்தினால் அவ்வாறான எந்தவொரு வழக்கோ அல்லது வெளிநாட்டு பயணத்தடையோ விதிக்கப்படவில்லை என … Read more

இலங்கைக்கு உதவும் வாய்ப்பை தவறவிட்ட ஜி20 நாடுகள் : சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய பொருளாதாரம்  உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் … Read more