சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் சுங்கப் பிரிவினரால் மீட்பு
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) இருந்து பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்களில் 68 தொலைக்காட்சிகள், 77 குளிரூட்டிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்கள் அடங்குவதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. Source link