கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல்நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச் 09ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. … Read more

முதலில் வருவோருக்கு முன்னுரிமை! இன்று முதல் இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (09.03.2023) முதல் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அந்த நாணயக் குற்றிகளில் ஒன்றை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக 6,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் … Read more

வடக்கில் மீண்டும் மாடுகளுக்கு இலம்பி நோய் Limpi disease – கால்நடை வைத்தியர்களை தொடர்புகொள்ள ஆலோசனை

வட மாகாணத்தில் மீண்டும் பெரிய அம்மை எனப்படுகின்ற இலம்பி நேய் Limpi disease தாக்கம் பரவி வருவதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த நோய் ஒரு வைரஸ் நோயின் தாக்கமாகும். குறிப்பாக, நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் இலகுவில் பரவக்கூடியதாகும். 2020ஆம் ஆண்டிலும் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டு, பூரண கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி, அவற்றை பராமரிப்பதன் மூலம் இந்த … Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி தொழிற் சந்தை

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் பாரிய தொழிற் சந்தை (mega career fair)யை மாவட்டச் செயலக வளாகத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தொழிற் சந்தைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் (08) இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது குறித்த தொழிற்சந்தையில் பங்குபெறும் அரச திணைக்களங்கள், கற்கை நெறிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழகுநர்கள் … Read more

நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாட்டில் உள்ள 3 அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆறு இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்தவர்களை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 6 பேரும் நியூசிலாந்திற்கு ஒரு படகு வழியாக தப்பி செல்ல முயன்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் நாட்டில் உள்ள கியூ பிரிவின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் தமிழ்நாட்டின் படகு உரிமையாளரிடம் முன்கூட்டிய பணம் செலுத்தி … Read more

ஒரு ஆரோக்கியமான வீடு:சமூக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு திட்டத்தின் அறிமுக கலந்துரையாடல்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒரு ஆரோக்கியமான வீடு : சமூக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு திட்டத்தின்” அறிமுக கலந்துரையாடல் (08) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறித்த திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்காக 1920 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி திறன் செயற்பாடுகளை இதுவரை காலமும் … Read more

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் எனவும், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தங்களின் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காக நான் சமீபத்தில் ஒரு அதிகரிப்புக்கு அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து அதற்கான அங்கீகாரத்தைம் பெற்றேன். … Read more

திடீரென குவியும் டொலர்கள்! கட்டுப்பாட்டை மீறும் அரச ஊழியர்களுக்கு எதிராக ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு (VIDEO)

இலங்கையின் பணவீக்கம் 60 தொடக்கம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையில் விலைமட்டங்கள் அதிகரித்தது என்பது உண்மை. ஒருபக்கம் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து குறைவடைந்துகொண்டு போகும் நிலைமை இருந்தாலும் கூட அதனை ஈடுசெய்கின்ற அளவுக்கு இலங்கையினுடைய விலைமட்டங்கள் அதிகரித்து செல்கின்றன. எனவேதான் வெளிநாடுகளில் இலங்கை பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகின்றது  என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் … Read more

15ஆம் திகதி இலங்கை முடங்கும்! இந்த நாடு மூடப்படும் – எடுக்கப்பட்ட தீர்மானம்

எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை (09.03.2023) முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பல தொழிற்சங்க நடவடிக்கைகளை … Read more

நாளாந்தம் 200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது

200 ரூபா இலஞ்சம் பெற்ற கல்முனை பேருந்து நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் தனியார் பேருந்தின் பயணப்பதிவு சீட்டில் கையொப்பமிட்டு, பேருந்தை சீராக இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக நாளாந்தம் 200 ரூபாவை அவர் கையூட்டலாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Source link