இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கு நிதியுதவி: முதல் மெய்நிகர் கூட்டம் இன்று

இலங்கை உட்பட்ட பல நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராயும் புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கூட்டம் நடைபெறவுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (17.02.2023) நடைபெறும் இக் கூட்டத்தில்,  சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மேலும் இந்தக் கூட்டம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் 20 குழுவின் தற்போதைய தலைமை நாடான … Read more

சிறிய மற்றும் பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். எரிபொருள் விலை, மின் … Read more

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். நேற்று இடம்பெற்ற இந்த (16) நிகழ்வில் சாய்ந்தமருது முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம். நியாஸ் , பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அலுலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் ,மாநகர சுகாதாரப்பிரிவினூடாக பல்வேறு சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில், நாட்டரிசி வகை நெல் மட்டுமே கொள்வனவு

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை அண்மையில் திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2022/2023 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குவதும், மேலதிக நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்வதும், தற்போதைய கடினமான பொருளாதார நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். குறித்த திட்டத்திற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. … Read more

6ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை:நேர்முகப் பரீட்சைக்கான அறிவிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற 6ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் இரண்டாம் கட்டத்தில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான திகதி மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான திகதி போன்ற விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று (17)அறிவித்துள்ளது. இதுதொடர்பான விபரங்களை http://applications.slbfe.lk/logroot/asptrain/6PointSystem_medidate23/edtself.asp  ஊடாக அறிந்துகொள்ள முடியும். இந்த பரீட்சையில் மூவாயிரத்து 950 பேர் சித்தியடைந்துள்ளனர். உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய இந்தப் பரீட்சை ,கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் நடத்தப்பட்டது. … Read more

அரசாங்கம் நிதியமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கை

பொது மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது தொடர்பில் ஆராயுமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த கோரிக்கையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலின் போதும் எதிர்கொள்ளாத பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தலுக்கான நிதியை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்  இந்த நிலையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு … Read more

கும்பத்திற்கு கோடான கோடி அதிஷ்டம்! ஆனால் இரு ராசியினருக்கு விபரீத யோகம்: நாளைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான நாளைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை … Read more

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள்! தகவல் தெரிவிக்க அமெரிக்க தூதரகம் மறுப்பு

இலங்கைக்கு வந்து சென்ற அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கள் குறித்து இன்னும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட 29 பேர் கொண்ட தூதுக்குழு, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு வந்த நிலையில் சந்திப்புக்களின் பின்னர் நேற்று புதன்கிழமை இலங்கையை விட்டு வெளியேறியுள்ளது. சி-17 குளோப் மாஸ்டர்கள் என்று கூறப்படும் இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர். இந்த குழுவில் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி … Read more

6ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை: சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை 

கடந்த ஆண்டு நடைபெற்ற 6ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் இரண்டாம் கட்டத்தில் மூவாயிரத்து 950 பேர் சித்தியடைந்துள்ளனர். உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய இந்தப் பரீட்சை கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதற்கு 24 ஆயிரத்து 378 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்த போதிலும்இ 18 ஆயிரத்து 269 விண்ணப்பதாரர்களே பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை றறற.ளடடிகந.டம இணையதளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். பரீட்சையில் … Read more