முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான்ஓயா பகுதியில் முறைப்பாடு ஒன்றினை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதுடன், கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்றைய தினம் (09.02.2023) இடம் பெற்றுள்ளது. யான் ஓயா என்ற கிராமத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மூவர் கைது குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்யச் சென்ற பொலிஸாரை தாக்கியதுடன், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த … Read more

தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடர் திருப்பம்! பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுத்த குடும்பத்தினர்

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடான சூழல் நிலவுவதாக தினேஷ் ஷாப்டரின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உட்கொண்டதால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில்,சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனையில் முரண்பாடு இதன்போது மரணத்திற்கான காரணம் தொடர்பில் … Read more

ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள அனுமதி

ஓமானில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை உடனடியாக அழைத்து வர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் பெண்களை அழைத்து வருவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதால், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு, இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு … Read more

ஏ.எச்.எம். பௌசீ மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீ இன்றைய தினம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்திருந்தார். நாடாளுமன்ற அமர்வுகளின் முதல் நடவடிக்கை இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. இதன்படி பௌசீ இன்றைய தினம் நாடாளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். இன்றைய நாடாளுமன்ற … Read more

தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன்

நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது இன்றைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. எனவே நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் … Read more

வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை (Photos)

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகளளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றம் அழைப்பாணை, இன்று (08.02.2023) நண்பகல் சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் வன்முறையை தூண்டியமை அதிகளவு ஆட்களை கூட்டியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தவத்திரு வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை … Read more

வீதியை பயன்படுத்த கட்டணம்! இலங்கையில் புதிய நடைமுறை

நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கட்டணம் அறவிடப்படும் முறை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்களிடம் இருந்து மாதாந்த கட்டணத்தை அறவிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பணம் வசூலிக்க நடவடிக்கை இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதால், வீதி அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அதற்கான பணத்தை வசூலிக்க  ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. … Read more

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகை! வெளியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  உள்நாட்டு இறைவரித் திணைக்களம்  இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.  வரி விலக்கு  இதன்படி, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYE Tax) முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்,  ஊழியர்களுக்கு பணமல்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்று இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   Source link

பேரணியில் சிங்க கொடியைக் காட்டிய நபர்கள்: ஏறாவூரில் பொலிஸ் பாதுகாப்பு (Video)

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர் பகுதியில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிங்க கொடியை காட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் நான்காவது நாளான இன்று (07.02.23) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ஏறாவூர் நகர் பகுதியில் பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நபர்கள் சிலர் சிங்க கொடியை … Read more

யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை சடுதியாக அதிகரிப்பு

வடக்கில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இந்த நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத ஒரு காலப்பகுதி என்பதால் மன்னாரில் இருந்து வடக்கு சந்தைக்கு கொண்டு வரப்படும் முருங்கையின் விலை உயர்ந்துள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. யாழ்ப்பாணம் கிளிநொச்சி, தம்புள்ளை தம்புத்தேகம ஆகிய மாகாணங்களின் மரக்கறிகள் … Read more