இலங்கை
கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டண திருத்தம்
16.11.2022 திகதிய 2306/35ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை கொன்சியூலர் அலுவலகம், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களின் ஊடாக 2023ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சான்றுறுதிப்பபடுத்தலுக்கான கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு மற்றும் அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களின் ஊடாக சான்றுறுதிப்படுத்தப்படும் சான்றிதழ்கள் / ஆவணங்களுக்கான … Read more
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார் . காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். ஒரு புகழ்பெற்ற … Read more
வாகன இலக்கத் தகடுகளில் ஜனவரி மாதம் முதல் மாற்றம்! நீக்கப்படும் விடயம் குறித்து அறிவிப்பு
வாகன இலக்கத் தகடுகளில் ஜனவரி மாதம் முதல் ஏற்படும் மாற்றம் தொடர்பில் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனப் பதிவுகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை விற்பதனாலோ அல்லது மாற்றுவதனாலோ இலக்கத் தகடுகளை … Read more
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் Rishabh Pant படுகாயம்
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் Rishabh Pant இன்று (30) காலை தில்லியில் இருந்து காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் விபத்துக்குளள்ளானார். காரை அவரே ஓட்டி சென்றார். தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. வீதி தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே … Read more
நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் பாடசாலை வளாகங்களை துப்பரவு செய்வதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை அதிபர்களினால் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த வருடத்தில் இதுவரை 75,434 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பல பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது
மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) – 2021
இலங்கையின் பெருமளவிலான முக்கிய நடவடிக்கைகளின் மையப்பகுதியாக விளங்குகின்ற மேல் மாகாணம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அதன் பங்கில் சிறிதளவிலான அதிகரிப்பொன்றுடன் 2021இல் பெயரளவிலான மொ.உ.உற்பத்தியின் (அடிப்படை ஆண்டு 2015) 42.6 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய வெளியீட்டிற்கு தொடர்ந்தும் பாரியளவில் பங்களித்துள்ளது. வடமேல் (11.1 சதவீதம்) மற்றும் மத்திய (10.1 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளை பதிவுசெய்தன. மேல், சப்பிரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்து பெயரளவிலான மொ.உ.உற்பத்திக்கு கிடைத்த பங்களிப்பு, 2020ஆம் … Read more
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் Russell Domingo இராஜினாமா
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் Russell Domingo இராஜினாமா செய்துள்ளார். இந்திய அணியுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் சுற்றுத் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்து. இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். Russell Domingo உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் 2019 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமைகளை ஆரம்பித்தமை … Read more
பொதுவான வானிலை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 டிசம்பர் 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 30ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு – மற்றுமொரு மோசடி அம்பலம்
அரச சேவையில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றவர்களில் 200 பேர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. . 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும் வெற்றிடங்களுக்காக கூடுதலான இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. சில அரச நிறுவனங்களின் தலைவர்கள் அநாவசியமான முறையில் தமக்கு நெருக்கமானவர்களை ஓய்வு பெற்றதன் பின்னரும் மீண்டும் அடிப்படை சம்பளத்துடன் சேவையில் இணைத்துக் கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் … Read more