“ரெட் விங்ஸி”ன் இலங்கைக்கான விமான சேவை ஆரம்பம்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான விமான வேவையை ‘ரெட் விங்ஸ்’ ரஷ்ய விமான சேவை நிறுவனம் இன்று (29) ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம் 398 பயணிகளுடன் மத்தள சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 9.48 மணியளவல் தரையிறங்கியது. வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.. இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் விமான சேவைகளை மேற்கொள்ளும் மூன்றாவது ரஷ்ய விமான சேவை நிறுவனம் இதுவாகும். இதேவேளை, மத்தளவிமான நிலையத்திற்குமிடையிலான வாராந்த விமான சேவகளை ரெட் விங்ஸ்’ … Read more

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்,பிரசவங்கள் வரலாற்று சாதனை

கொவிட் 19 சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டு (2022) ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக மீள ஆரம்பிக்கப்பட்டது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டின் இது வரைக்கும் 510 பிரசவங்கள் இடம்பெற்றதாக அந்த வைத்தியாசலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார். “இந்த வைத்தியசாலையைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான வரலாற்று சாதணையாகு” மென அத்தியட்சகர் கூறினார். இதனடிப்படையில் இவ்வாண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2022 டிசம்பர் 28ம் திகதி … Read more

சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலி – 2 யானைகள் உயிரிழப்பு

சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இரண்டு காட்டு யானைககள் இறந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர். யானைகள் இறந்தமை தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்காமல்  ,பெக்கோ இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இறந்த யானைகளை இரகசியமாக புதைத்தhகவும் பொலிஸ் பொலிஸ் விசாரணையில் தெரியந்துள்ளது. திறப்பனை பொலிஸ் பிரிவின் ஊட்டிமடுவ, ஞானிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் … Read more

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் திகிலிவெட்டைக்கு கள விஜயம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள்  மட்டக்களப்பு திகிலிவெட்டை பாலத்திற்கான கள விஜயமொன்றினை மேற்கொண்டனர். உள்ளூர் உற்பத்தி, வேளாண்மை தன்னிறைவு போன்றவற்றிற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வீதிகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி இயன்றவரை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் பல இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார். M M Fathima Nasriya

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் புலனாய்வு சேவையுடன் இணைந்த இலங்கையர்கள் (Video)

இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் தொடர்பில் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த 9 பேர் தொடர்பிலும், நாட்டின் அனைத்து … Read more

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்

பிரதான பொலிஸ் பரிசோதகராக ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த பீ.கே.எட்டியாராட்சி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், வெற்றிடத்திற்கு அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக இவர் (28) புதன்கிழமை சமய வழிபாடுகளை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட … Read more

அரச நிறுவனங்கள் இலங்கை மின்சார சபைக்கு 250 கோடி ரூபா கடன்

அரச நிறுவனங்கள், இலங்கை மின்சாரசபைக்கு 250 கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரக் கட்டணங்களே இந்த கடன் தொகையாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. கட்டண நிலுவைகள் வைத்தியசாலைகள், கல்வி நிறுவனங்கள், இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் போன்ற அரசாங்க நிறுவனங்களே அதிகளவில் மின்சாரக் கட்டண நிலுவைகளைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களிடமிருந்து கட்டணங்களை அறவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை செலுத்தாத போதிலும் அரச நிறுவனங்கள் என்ற காரணத்தினால் அவற்றின் … Read more

ஜனவரி 05 ஆம் திகதி முதல் ,அநுராதபுரம் – வவுனியா ரயில் பாதை மூடப்படும்

வடக்கு ரயில் பாதை சீரமைப்புக்கான அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 05 ஆம் திகதி முதல் அநுராதபுரம் – வவுனியா ரயில் பாதை மூடப்படவுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவை இக்காலங்களில் வவுனியா வரை நடைபெறும். கல்கிஸ்சை, கொழும்பு கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி புறப்படும் யாழ்.தேவி ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வழமை போன்று அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற … Read more

பொலிஸாரின் விசேட அறிவிப்பு

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “இலங்கை பொலிஸாரால் 2018ஆம் ஆண்டு குடிபோதையில் … Read more

வடக்கு ரயில் இருக்கை முன்பதிவு நேரங்களில் மாற்றம்

வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகள் காரணமாக, வடக்கு ரயில் பயண சீட்டு மற்றும் இருக்கை முன்பதிவு நேரம் ஆகியவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெகுஜன ஊடக .,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதுதொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் (வணிகம்) வி.எஸ். பொல்வத்தகே மேலும் தெரிவிக்கையில் ,வடக்கு புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் ,ரயில் பயணிகள் தமது பயணத்தை … Read more