தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் வைபவம் தொடர்பான தவறான தகவல்கள் இலங்கை ஊடகங்களில்

2022 டிசம்பர் 16ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் விழா தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியான செய்திகள் குறித்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது. ஓமானில் உள்ள ஸ்ரீ சம்புத்த விகாரையின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி பிரித் ஓதுதல் நிகழ்வுக்கான செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தவறான தகவல்களை தூதரகம் மறுக்கின்றது. இந்த நிகழ்வு தொடர்பான அனைத்து செலவுகளையும் ஸ்ரீ சம்புத்த விகாரையின் குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும், தூதரக வளாகத்தில் ‘பிரித் … Read more

யாழ். இந்திய துணைத் தூதுவருக்கும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருக்கும் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை திரு ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான திரு அங்கஜன் இராமநாதக்கும் இடையில் சந்திப்பு இன்று (23) இடம்பெற்றுள்ளது.. நல்லூரில் மாவட்ட அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மாகாண மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் தற்கால பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன்  ,இந்திய அரசு மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நாட்டின் வறுமை மிகுந்த மாவட்டங்களில் யாழ் … Read more

LPL இறுதிப் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் ,ஜப்னா கிங்ஸ் அணிகள்

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையே இன்று (23) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் ‘கொலிபையர் – 2’ போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (22) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் … Read more

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக பொதுவான நீண்ட தூர ரயில்களுக்கு மேலதிகமாக பின்வரும் வகையில் விசேட ரயில் சேவைகளுக்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான விசேட ரயில் சேவை 2022.12.23 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் இரவு 9.20 காங்கேசன்துறை – கொழும்பு கோட்டைக்கு இடையிலான … Read more

நாளாந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் நாளாந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார். நீண்ட நேர மின்வெட்டு அவர் மேலும் கூறுகையில், நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டாலும் நீண்டநேர மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறானதொரு நிலையில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கான மாற்று வழிகள் இனங்காணப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நுரைச்சோலை, நிலக்கரி … Read more

சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். தெஹியோவிற்ற  படங்கல இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமான LIGHTING DIGITAL தகவல் தொழிநுட்ப பயிற்சி முகாமின் மாணவர்களுடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்…. 2023ஆம் ஆண்டு இலங்கையில் … Read more

நாடு முழுவதும் விசேட நடவடிக்கை! மக்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொது மக்களின் கைகளில் புழங்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண்டிகை நாட்களின் மக்களின் பாதுகாப்பிற்காகவும், சந்தேகநபர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான … Read more