ரோட்டரி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்

உலகின் பிரபல அரச சார்பற்ற அமைப்பான ரோட்டரி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் ஜெனீபர் ஜோன்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை மக்களுக்கான சில அபிவிருத்தித் திட்டங்கள் அவரின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதே இந்தவேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இலங்கைக்கான இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜெனிபர் ஜோன்ஸ் உத்தியோகபூர்வமாக பல முக்கிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார். இலங்கையின் அழிந்துபோன வனப்பகுதியை மீண்டும் வளர்ப்பதற்காக ரோட்டரி ஒரு மில்லியன் … Read more

சுகாதார ரீதியில் பாதிப்பான நிலை இல்லை

வளிமண்டலத்தில் ஏற்பட்ட வளி மாசு காரணமாக சுகாதார ரீதியில் தற்போது பாதிப்பான நிலை இல்லை என்று தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் கண்டது ஆனால் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வளி தர சுட்டிக்கு அமைவாக 100ற்கும் 150ற்கும் இடைப்பட்ட தர நிலையில் இலங்கை காணப்படுகிறது. வடக்கு, வடமேல், மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் நகரப் பிரதேசங்களில் காலநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படக்கூடும் … Read more

கால்நடைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மாகாண கால்நடை உற்பத்தி , சுகாதார திணைக்களம் கவனம்

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக கால்நடைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது இந்த நிலையில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட கால் நடை பண்ணையாளர்களுக்கு தெளிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.குறைந்தபட்ச வசதிகள் ஏதுமின்றி வனப்பகுதிகளில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. … Read more

பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு …..

பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது. அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று குறிப்பிட்டார். அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த ,அரசாங்கம் ஆதரவளிக்கும்- ஜனாதிபதி.

சட்ட பீடம் உட்பட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தாராளமான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (10) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Back To the Faculty of Law – Law Faculty சட்ட பீடத்திற்கு மீண்டும் – சட்ட பீடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் சட்ட பீட பீடாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) காலை இடம்பெற்ற சிநேகபூர்வ … Read more

பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது

பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு, மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில்  (08, 09) மாடுகள், எருமைகள், ஆடுகள் திடீரென உயிரிழந்ததைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை பொலிஸாரும், தொடர்புடைய அதிகாரிகளும் … Read more

தெற்கு அந்தமான் பகுதியில், 13ம் திகதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் எதிர்வரும் 13ம் திகதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுவதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 13 மற்றும் 14 திகதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, 9 கி.மீ. வேகத்தில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் நகர்கிறது. கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

வடக்கு கிழக்கில் இறந்த கால்நடைகள் தொடர்பில் ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த தீர்மானம்

சமீபத்திய காலநிலை மாற்றத்தின் காரணமாக ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த பசுக்கள் , எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் தொடர்பில் ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலநிலை மாற்றத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடை வள பிரிவு தெரிவித்துள்ளது. இறந்த கால்நடைகள் தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை … Read more