கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்த அமெரிக்க சொகுசு கப்பல்

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்றையதினம் 900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலானது நாளை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுற்றுலாப் பயணிகள்  கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், இலங்கையின் முக்கிய இடங்களை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.  சுற்றுலாப் பயணிகள் கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரப் பயணங்கள், … Read more

சிறுவர்கள் தொடர்பான சம்பவங்களின் போது, ஊடகங்கள் மூலம் அவர்களை வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்கான சட்டங்களை…..

சிறுவர்கள் தொடர்பான சம்பவங்களை ஊடகங்களில் அறிக்கையிடும் போது சிறுவர்களை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான சட்டங்களை தயாரிப்பது தொடர்பில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (10) கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மில்லனிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு … Read more

கோர விபத்தில் மூவர் பரிதாபமாக பலி – இன்று காலையில் நடந்த பயங்கரம்

குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கல்கமுவ – இஹலகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இராணுவ மேஜரொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். Source link

இலங்கை வீரர்கள் நால்வர் ஐ.பி.எல் தொடரில்…

அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய பிரிமியர் லீக் தொடரில் நான்கு இலங்கை வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தமது அணியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் விபரம் வெளியிட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு அணிகளால் வாங்கப்பட்ட இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்களில் 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், 2 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் … Read more

தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முன்வரும் இலங்கை செல்வந்தர்கள் பலர்

சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தால் நேற்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு உடனடியாக உள்ளூர் முகவரியை வழங்க வேண்டியிருப்பதால், பணக்கார இலங்கை குடிமகன் ஒருவரின் வீட்டில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 150,000 அவுஸ்திரேலிய டொலர்களின் உத்தரவாதம் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. இலங்கைப் பெண் இந்தநிலையில், மெல்பேர்னில் வசிக்கும் பெயர் குறிப்பிடப்படாத இலங்கைப் பெண் ஒருவர் கிரிக்கெட் வீரருக்கு … Read more

பொருளாதார வீழ்ச்சில் இருந்து நாடு மீண்டு வருகிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரண

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். .ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் மூன்றாவது நாளாக இன்று (17)  நடைபெற்றது. உலகில் சுற்றுலாவுக்கான மிகச் சிறந்த நாடாக, 2019 ஆம் ஆண்டு லோன்லி ப்லனட் சஞ்சிகை இலங்கையை குறிப்பிட்டிருந்தது. … Read more

புதிதாக தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக  புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இலங்கையின் அடுத்த தலைமுறையினர் முன்னோக்கி பயணிப்பதற்கான தமது சுயமான தொழில் முயற்சிளை ஊக்குவிப்பதற்காக  Brandix Apparel Ltd. நிறுவனம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்  (ICTA) நிறுவகத்துடன் மூலோபாய கூட்டு முயற்சி நடவடிக்கையில் ஒன்றிணைந்துள்ளது. இது தொடர்பான மூலோபாய கூட்டு முயற்சி நடவடிக்கையில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த 17 ஆம் திகதி  கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த கூட்டு முயற்சியின் மூலம் தொழில்நுட்ப தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களின் தொடக்க சுற்றுச்சூழல் கட்டமைப்பு  Startup இந்த நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகவும் செயலாக்கம் மிக்கதாக … Read more

உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2022 FIFA World Cup

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2022 FIFA World Cup ,கத்தார் நாட்டில் நாளை மறுதினம் (20( ஆரம்பமாகிறது. போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது.முதல் போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதவுள்ளன. ஆரம்ப நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி  அல் பைத் அரங்கில் நடைபெறும். உலக கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் … Read more

இஸ்லாம் பாடப்புத்தகம்:இணையத்தளங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல

2022 ஆம் ஆண்டு இஸ்லாம் பாடத்துடன் தொடர்புடைய திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், தற்போது தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தப் பாடப்புத்தகங்களில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு இவ்விடயங்களை ஆராய்ந்து, உரிய திருத்தங்களை மேற்கொண்டு அப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டுள்ளது. எவ்வாறாயினும், சில இணையத்தளங்களில் மத அடிப்படைவாதம் கொண்ட … Read more