இலங்கை
சாம்பியனை விரட்டியடித்த அவுஸ்திரேலியா!(Video)
இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலைய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 288 ஓட்டங்கள் வெற்றி இலக்கு 288 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று … Read more
பிரித்தானியா செல்ல முயற்சித்த மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கினர்
போலி விசாக்களைப் பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், மல்லாவி மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏற்பட்ட சந்தேகத்தின் … Read more
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு காரணத்தை வெளிப்படுத்திய முகவர் நிலைய உயர் அதிகாரி (Video)
எரிவாயு தட்டுப்பாடு, மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஏற்படுகின்றது என கல்முனை பிராந்திய எரிவாயு முகவர் நிலைய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை – கல்முனை பிராந்தியத்தில் உள்ள பெரியநீலாவணை, மருதமுனை, மணல்சேனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது மற்றும் சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சடுதியாக லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவியிருந்தன. எரிவாயு தட்டுப்பாடு மக்கள் விறகு … Read more
இலங்கை – தென்ஆபிரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு.
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று (16) இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து உரையாடியனார். ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, நாடு திரும்பும் வழியிலேயே அவர் இலங்கைக்கு மிக குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் கட்டுநாயக்கவிலுள்ள விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, இலங்கையில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து … Read more
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் தலைமையில் இன்று (17) நிதியமைச்சில் நடைபெற்றது. உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் (Faris Hadad-Zervos) உள்ளிட்ட குழுவினருடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் எதிர்கால … Read more
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் இன்று ஏற்பட்ட திடீர் திருப்பம் (Video)
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பிணை அனுமதியை சிட்னி நீதிமன்றமொன்று இன்றைய தினம் (17.11.2022) வழங்கியுள்ளது. தனுஷ்க குணதிலக்க பலவந்த பாலியல் உறவின்போது அவுஸ்திரேலிய பெண்ணின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின் கீழ் கைது 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனுஷ்க … Read more
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் இன்று ஏற்பட்ட திடீர் திருப்பம் (Video)
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பிணை அனுமதியை சிட்னி நீதிமன்றமொன்று இன்றைய தினம் (17.11.2022) வழங்கியுள்ளது. தனுஷ்க குணதிலக்க பலவந்த பாலியல் உறவின்போது அவுஸ்திரேலிய பெண்ணின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின் கீழ் கைது 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனுஷ்க … Read more
வசந்த முதலிகே மற்றும் வண. சிறிதம்ம தேரர் தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய கொம்பனி வீதி பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2022, ஆகஸ்ட் 19, அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக இருவரை சந்தேக நபர்களாக பெயரிட அனுமதி கோரிய பொலிஸார், அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது. அனுமதி வழங்கிய மன்று இதனையடுத்து அதற்கான அனுமதியை … Read more