கடவுச்சீட்டு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு
கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் இன்று(17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் பின்வருமாறு:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் இன்று(17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் பின்வருமாறு:
யாழ்.பல்கலைக் கழகத்தின் இந்து பீடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு வருடந்தோறும் சுமார் 100 மாணவர்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் துறைசார் அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்தவிற்கும் இடையில் கடந்த(14.11.2022) அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து நாகரீகம், சமஸ்கிரதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகிய கற்கைநெறிகளைக் கொண்ட தனித்துவமான பீடமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு இந்து பீடம் உருவாக்கப்பட்ட போதிலும், … Read more
இலங்கை மின்சார சபை பல்லாயிரக்கணக்கான ரூபா நஷ்டத்தை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. 2022ம் நிதியாண்டுக்கான மூன்றாம் தவணைக்காலமான கடந்த ஜுலை தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மட்டும் 4431 கோடி ரூபா நஷ்டத்தை மின்சார சபை எதிர்கொண்டுள்ளது. இலங்கை மின்சர சபை இது தொடர்பான விபரங்கள் மின்சார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சர சபை கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் 2145 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. … Read more
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சாசனத்தின்படி, ஜூன் 2027க்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக … Read more
இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு … Read more
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான யுத்தம் காரணமாக ரஷ்ய தயாரிப்பான இலங்கை விமானப்படை பயன்படுத்தி வரும் எம்.ஐ.17 போக்குவரத்து உலங்குவானூர்திகளை பழுப்பார்ப்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இடைநிறுத்தியுள்ளன. நேட்டோ நாடுகளுக்கான ரஷ்யாவின் தடை அத்துடன் ரஷ்யா எம்.ஐ.17 உலங்குவானுர்திகளை நேட்டோ நாடுகள் பழுதுப்பார்ப்பதற்கு தடைகளை விதித்துள்ளது. எம்.ஐ.17 வானூர்திகளை பழுதுப்பார்த்து வந்த லித்துவேனியா உலங்குவானூர்திகள் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான லித்துவேனியாவில் பழுதுப்பார்க்கப்பட்டு வந்தன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் … Read more
மோட்டார் வாகன பதிவுக்கட்டணம் நாளை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ,போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார். மோட்டார் வாகனத்திற்கான வழமையான பதிவுக் கட்டணம் இரண்டாயிரம் ரூபாவாகும். முன்னுரிமை அடிப்படையிலான பதிவுக்கட்டணம் மூவாயிரம் ரூபாவாகும். ஒரு நாள் பதிவுக் கட்டணமாக நான்காயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது. மோட்டார் வாகனத்திற்காக நாளாந்தம் தாமதக் கட்டணம் 100 ரூபாவாகும். மோட்டார் சைக்கிளுக்கான நாளாந்தக் கட்டணம் 50 ரூபாவாகும். மோட்டார் வாகன சான்றிதழ் விபரங்களில் … Read more
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியகுறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 19 ஆம், மற்றும்20 ஆம் திகதிகளில் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த … Read more
இலங்கையில் அரச ஊழியர்கள் பலரை நஷ்டஈடு வழங்கி வீட்டிற்கு அனுப்ப நேரிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடி நிலைமை மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து எவரும் விடுபட முடியாது. இந்த நிலைமைக்கு அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக்கூற … Read more
பிரதான நகரங்களுக்கான, வானிலை முன்னறிவிப்பு 17.11.2022