கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து, மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு வழங்க அப்பகுதி பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கபோவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சந்தர்ப்பத்தினை தற்போதுள்ள … Read more

அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் (SFRC) பணியாட்தொகுதியின் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்

ஐக்கிய அமெரிக்காவின் செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் (Senate Foreign Relations Committee) பணியாட்தொகுதியின் அதிகாரிகள் குழு, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (10) சந்தித்தனர். இந்தக் குழுவினர் பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்ததுடன், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன் போது இவர்கள் பாராளுமன்றத்தின் குழு முறைமைகள் குறித்து சபாநாயகர் மற்றும் செயலாளர் நாயகத்துடன் விரிவாகக் கலந்துரையாடினர். … Read more

2023 வரவு செலவுத் திட்டத்தின், இலக்கு இளைஞர்களின் எதிர்காலம் – ஜனாதிபதி

நாட்டில் இளம் சமுகத்தினர் எதிர்பார்க்கும் மாற்றத்துடன் கூடிய சிறந்த எதிர்காலத்திற்கான புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். சுதந்திர இலங்கையின் 77ஆவது வரவு செலவுத் திட்டமாக, 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நேற்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்து,இதனைக் குறிப்பிட்டார். போட்டிமிக்க நவீன பொருளாதாரத்திற்கான பயணம் இந்த வரவு செலவுத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்படும். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் பூர்ததியாகும் 2048ஆம் ஆண்டில் … Read more

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும். எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம திகதி முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை இடம்பெறும். இதன் வாக்கெடுப்பு டிசம்பர் எட்டாம் திகதி மாலை இடம்பெறும். இன்று முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்ந்த வாரத்தின் அனைத்து நாட்களிலும் … Read more

ஊடகவியலாளர்களிடம் கோபமடைந்த மஹிந்த

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார். இதன் பின்னர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.  “நல்லதொரு வரவு செலவு திட்டம். வேறு என்ன கூறுவது நல்ல வரவு செலவு திட்டம். அவ்வளவு தான்” என மஹிந்த கூறியுள்ளார். அப்படி என்றால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த வரவு … Read more

சவூதி அரேபிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரியுடன் சந்திப்பு

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அஜ்லான் குழுமத்தின் துணைத் தலைவரும், சவூதி அரேபியாவிலுள்ள சவூதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியை 2022 நவம்பர் 13ஆந் திகதியாகிய நேற்றைய தினம் அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கையின் பொருளாதார மீள்தன்மை மற்றும் துறைமுக நகரத்திலும் மற்றும் விருந்தோம்பல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளிலும் காணப்படுகின்ற சாத்தியமான முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அமைச்சர் சப்ரி … Read more

பத்தலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை & பதவிதாரிகள் கல்லூரியில் இந்திய இராணுவ பிரதிநிதிகள்

இந்தியாவின், வெலிங்டனிலுள்ள பாதுகாப்புச்சேவைகள் அலுவலர் கல்லூரி மற்றும் புனேயிலுள்ள பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்ப அலுவலர் கற்கைநெறியைச் சேர்ந்த நால்வரடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் 2022 நவம்பர் 07 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். பத்தலந்த பாதுகாப்புசேவைகள் கட்டளை & பதவிதாரிகள் கல்லூரியில் பயின்றுவரும் இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பயிற்சிகள் இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக  புதிய இராணுவ தொழில்நுட்பம் மற்றும் நிகழ்காலத்திலும் எதிர்வரும் காலங்களிலும் அவற்றின் பயன்பாடுகள் தொடர்பாக பயிற்சிகள் … Read more

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள் வரவுசெலவுத்திட்ட உரை முன்வைப்பதைப் பார்வையிட வருகை  

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள்  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுப்பதற்கு இன்று (14) பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து தெரிவித்தார். பாராளுமன்ற வரலாற்றில் வரவுசெலவுத்தித்திட்டம் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என படைக்கல சேவிதர் குறிப்பிட்டார். மேல்மாகாண பாடசாலைகள் சிலவற்றின் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட மாணவ மாணவியர், … Read more

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக சபைக்கு வருகை தந்தார்

01:33 PM: நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக சபைக்கு வருகை தந்தார்  நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக சபைக்கு வருகை தந்தார்.   “புதிய ஆரம்பத்தை நோக்கி இலங்கை “என்பதே வரவு செலவுத் திட்டத்தின் கருப்பொருளாகும் வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதார மீள் எழும் வழிக்கு ஒளி துன்பம் ஓரளவுக்கு குறைந்து ஒரு ஆறுதல் யுகத்தை நோக்கிய செயற்பாடு கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பணவீக்கம் ஓரளவு குறைந்தது … Read more