வரவுசெலவுத்திட்ட உரை – 2023

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (14) பிற்பகல் ஆரம்பமானது. இதன்போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தினார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தி வரவு செலவு திட்ட உரை பின்வருமாறு வரவுசெலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி…. அணுகுமுறை​ கௌரவ சபாநாயகர் அவர்களே, கடந்த சில மாதங்களாக … Read more

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் ,க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள்

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண பரீட்சை பெறுபேறுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடரபாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவிக்கையில், இம்மாதம் இறுதியில்  அல்லது அதற்கு முன்னதாகவோ பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கட்டாயமாகும் அடையாள அட்டை

பயணத்தின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என பொலிஸார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மேலும், ஒரு நபர் பணியில் இருந்தால், அந்த நபர் தொடர்பாக சரிபார்க்கப்பட வேண்டிய தகுந்த ஆவணங்களை … Read more

அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பரிசீலிப்பதற்காக பகிரங்க வாழ்வில் அல்லது உயர் தொழிலில் தமக்கென்று சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கீர்த்தி வாய்ந்தவர்களும் நேர்மையுடையவர்களும் அத்துடன் ஏதேனும் அரசியற் கட்சியின் உறுப்பினரல்லாதவர்களுமான ஆட்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் www.parliament.lk என்னும் பாராளுமன்ற இணையத் தளத்தில் காணப்படும் மாதிரிப்படிவத்துக்கு … Read more

சுதந்திர இலங்கையின் 77ஆவது வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான அனைத்து……..

சுதந்திர இலங்கையின் 77ஆவது வரவு செலவுத் திட்டமாக, 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட உரையை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்க உள்ளார்.   எதிர்வரும் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட செலவினம் 7இ885 பில்லியன் ரூபாவாகும். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,785 பில்லியன் அதிகரிப்பாகும். அதன்படி, அதன் அதிகரிப்பு 29.2 சதவீதமாக … Read more

வாகன சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்

வாகன சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி இன்று (14) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. பற்றாக்குறையாக இருந்த 5 இலட்சம் அட்டைகள் அச்சிடும் உரிமத்திற்காக கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக பதிதாக சாரதி அனுமதி பத்திரம் அச்சிடப்பட்டு வழங்கப்படும்

தொழில்நுட்பப் பரீட்சைக்கு (GIT) விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த பபரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 25 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவர்கள் மாத்திரமே, இப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து விண்ணப்பங்களும்; … Read more

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில், சமர்ப்பிப்பதற்கு தேவையான அனைத்து……..

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற செயலாளர் நாயகம் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் நலன் மற்றும் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.   பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் இதில் உள்ளன.   இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பொதுச் சேவையை திறம்படச் செய்யவும், பொதுச் சேவைப் … Read more

நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான 2023 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். 2023 வரவு செலவுத் திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more