மாலைத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – பத்து பேர் உயிரிழப்பு

மாலைத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில்  பத்து பேர்  உயிரிழந்துள்ளனர். மாலைத்தீவு தலைநகர் மாலேவில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று (10) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடையில் முதலில் பிடித்த தீ விரைவாக கட்டிடம் முழுவதும் பரவியதால் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு விசாரணை … Read more

இலங்கைப் பாராளுமன்றத்தினால் கட்டான பிரதேச சபையின் உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி  

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு விசேட பொதுச் சேவைகள் நிகழ்ச்சி கட்டான பிரதேச சபையில் அண்மையில் நடைபெற்றது. பிரதேச சபையின் உறுப்பினர் அசங்க கமல்சிறி. த சில்வா இலங்கை பாராளுமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பாராளுமன்றம் மற்றும் அதன் கோட்பாடு, பாரம்பரியம் பற்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக, சட்டவாக்க சேவைகள் மற்றம் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனகாந்த … Read more

இலங்கையின் குளிர் கால சுற்றுலா ஆரம்பம்

நவம்பர் மாதம் முதல் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் இது வெற்றிகரமான ஆரம்பமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பமானதை தொடர்ந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், இதில் முதல் இடத்தை ரஷ்யா பெற்றுள்ளது. மேலும் இதுவரையில் 5 இலட்சத்து 76 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை … Read more

நாடாளுமன்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட பரிசோதனை இன்றைய தினம் நாடாளுமன்றின் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கடந்த காலங்களைப் போன்றே இந்த ஆண்டிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 14ம் திகதி நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. … Read more

கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை! வெளியானது அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களின் குடியுரிமை மற்றும் இதர சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தும் செயன்முறை நிறைவடைந்ததும் அவர்களை விரைவாக நாட்டிற்கு மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான … Read more

மழை நிலைமை மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு இதேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர் 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர்11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் வடமேற்குதிசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக தமிழ்நாடு பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, வடக்கு, வடமத்தியமற்றும் வடமேல்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் … Read more

இலங்கையின் வர்த்தகர் ஒருவருக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. முகமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத் லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன்; இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் அல்லது நிசார் இலங்கையை … Read more

திருகோணமலைக் குச்சவெளி பிரதேசத்தில் இயற்கை விவசாயம் (ORGANIC FARMING)

வரலாற்றில் முதற் தடவையாக குச்சவெளி பிரதேசத்தில் 10இற்கும் அதிகமான நிலப்பிரதேசம் நெல் விவசாயம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் சுமித் கொடின்கடுவ தெரிவித்தார். பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு, நாட்டின் தற்போதைய சிக்கல் நிலைமைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து அரசின் இலக்குகளுக்கு இணங்க இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். திருகோணமலைக் குச்சவெளிப் பிரதேசத்தில் இயற்கை விவசாயத்தை (Organic farming) முன்னேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கொள்ளும் விவசாயத்தை … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ,வீட்டு பணிப்பெண்கள் பயிற்சி அற்ற துறைகளில்  ,தொழிலுக்காக முகவர் நிலையங்கள் ஊடாக செல்வது தடை செய்யப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்ட பெண்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓமான் மற்றும் ஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளில் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் … Read more